நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!

 

நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!

2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் அதிமுக ஆட்சியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மே மாதம் வெளியான தேர்தல் முடிவில் திமுக புதிதாக ஆட்சியமைத்தது. இதன் காரணமாக புதிய அரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக துறைரீதியான ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.

நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!

இதையடுத்து தமிழகத்தில் திமுக தலைமையிலான 16வது சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் ஜூன் மாதத்தில் நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்த நிலையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தீர்மானத்தின் மீதான விவாதம் ஆகியவை நடைபெற்று முடிந்தது. இதையடுத்து ஜூன் 24ஆம் தேதி சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் சபாநாயகராக ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன் தமிழக அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் விவசாய துறைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக ஆலோசிக்க தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு கூடுகிறது. வருகின்ற ஆகஸ்ட் 13-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.