முதல்வருக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நன்றி!

 

முதல்வருக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நன்றி!

தைப்பூச திருவிழாவை பொது விடுமுறையாக அறிவித்த முதல்வர் பழனிசாமிக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.

முதல்வருக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நன்றி!

தமிழகத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வரும் 28ம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இனிவரும் ஆண்டுகளில் அனைத்து தைப்பூச திருவிழாவையும் பொதுவிடுமுறை பட்டியலில் சேர்த்து முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்வருக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நன்றி!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்த போது இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவுக்கு பொது விடுமுறை அளிப்பது போன்று தமிழ்நாட்டிலும் தைப்பூச திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியதால் இந்த முடிவு எடுத்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக கோரிக்கையை ஏற்று தைப்பூச திருவிழாவை பொது விடுமுறை பட்டியலில் சேர்த்து விடுமுறை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி! என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார் .