ஸ்புட்னிக் தடுப்பூசியை புதுச்சேரியில் தயாரிக்க தமிழிசை வேண்டுகோள்!

 

ஸ்புட்னிக் தடுப்பூசியை புதுச்சேரியில் தயாரிக்க தமிழிசை வேண்டுகோள்!

தெலுங்கானா ராஜ்பவனில் நேற்று மாலை காணொலி காட்சியின் வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் தயாரிக்கும் முயற்சியிலும் மற்றும் மத்திய ராணுவ ஆராய்ச்சி நிறுவனமான DRDO கண்டுபிடித்திருக்கும் கொரோனா சிகிச்சைக்கு மிகவும் பயன்தருவதாகவும், மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 2DG மருந்தையும் தயாரிக்கும் நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரிஸ் நிறுவனங்களுடன் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துரையாடினார்.

ஸ்புட்னிக் தடுப்பூசியை புதுச்சேரியில் தயாரிக்க தமிழிசை வேண்டுகோள்!

முதலில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 2DG மருந்து தயாரிப்பதற்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்ட தமிழிசை, கொரோனா தடுப்பு மருந்துகள் தயாரிப்பதன் மூலம் கொரோனாவுக்கு எதிரான கடுமையான போரில் பேருதவியாக இருக்கும் என்றார். இந்த ஸ்புட்னிக் தடுப்பூசி தெலுங்கானாவில் 3 இடங்களில் தயாரிக்கப்படுகிறது . அதே மாதிரியான தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிலையங்களை புதுச்சேரி மாநிலத்திற்குள்ளும் ஆரம்பித்தால் அது புதுவை மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவது மட்டுமல்லாமல் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளில் புதுச்சேரி, தமிழக மக்களுக்கு பயனளிப்பதாகவும் இருக்கும் என்றும் தமிழிசை கோரிக்கை வைத்தார்.

ஸ்புட்னிக் தடுப்பூசியை புதுச்சேரியில் தயாரிக்க தமிழிசை வேண்டுகோள்!

. அதன் சாத்தியக்கூறுகளை ஆராய்வதாக டாக்டர்.ரெட்டிஸ் குழுமத்தினர் உறுதி அளித்துள்ள நிலையில், சாத்தியக்கூறுகள் தென்பட்டால் புதுச்சேரி முதலமைச்சரோடு கலந்து ஆலோசித்து அதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.