• April
    03
    Friday

Main Area

Main



மோடியை சந்திக்க டெல்லி செல்லும் ஜி.கே.வாசன்: தமிழக பாஜக பதவியை ஏற்பாரா?

ஜிகே வாசன்
ஜிகே வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் இன்று பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்கிறார். 

மக்களவை தேர்தலில்  அ.தி.மு.க. - பாஜக  கூட்டணியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூத்தினை அமைத்து தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டது.  இதன் பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இணக்கம் காட்டி வந்த பாஜகவினர் வாசனை தங்கள் கட்சிக்குள் இழுக்க முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.

vasan

சீன அதிபர் - மோடியின் சென்னை வருகையின் போது  கூட, மோடியை வரவேற்க சென்ற வாசனை, விரைவில் டெல்லிக்கு வருமாறு அன்புக்கட்டளை போட்டுள்ளார் மோடி.

vasan

இந்நிலையில் இன்று டெல்லி செல்லும் ஜிகே வாசன், மோடி மற்றும் அமித் ஷாவை சந்திக்கவுள்ளார். ஏற்கனவே வாசனின் வருகையை விரும்பும் பாஜக மேலிடம், தமிழக பா.ஜ.க-வை அவர்தான் வழிநடத்த வேண்டும் என்று விரும்புவதாக அரசல்புரசலாக பேசப்படுகிறது.

modi

ஒருவேளை அதற்கு ஜிகே வாசன் சம்மதம் சொல்லாத நிலையில்  மத்திய அமைச்சர் பதவி தரவும் தயாராகவுள்ளதாம் பாஜக.  ஒருவேளை இதற்கு வாசன் தரப்பில் பச்சைக்கொடி காட்டினால், விரைவில் பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அரசியலில் நீடித்திருக்க ஜிகே வாசன் பல அதிரடியான முடிவுகளை எடுப்பாரா? இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

2018 TopTamilNews. All rights reserved.