கைபேசியில், 1-ம் இடத்தில் இருந்த தமிழ் 9-ம் இடத்தில்?

 

கைபேசியில், 1-ம் இடத்தில் இருந்த தமிழ் 9-ம் இடத்தில்?

வீட்டுக்கு வீடு கியாஸ் சிலிண்டர்களை “புக்” செய்வதில் மத்திய அரசு ஒரு புதிய நடைமுறையைக் கொண்டு வந்தது. இதன்படி நமது கைபேசியிலேயே கியாஸ் சிலிண்டர்களை புக் செய்து விடலாம்
இதற்காக பிரத்யேக கைபேசி எண்களும் தரப்பட்டன. இண்டேன் சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் 8124024365 என்ற எண்ணை அழுத்தி பதிவு செய்யவேண்டும். எச் பி கேஸ் வாடிக்கையாளர்கள்… 9092223456 என்ற எண் மூலம் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

கைபேசியில், 1-ம் இடத்தில் இருந்த தமிழ் 9-ம் இடத்தில்?

இப்படி சமையல் கியாஸ் பதிவு செய்யும் போது தமிழ் வழியில் பதிவு செய்ய எண்-1, ஆங்கில வழியில் பதிவு செய்ய எண்-2 ஐ அழுத்த வேண்டும். நுகர்வோர் எண், செல்போன் எண், வினியோகஸ்தர் எண் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக பதிவு செய்யவேண்டும். இவ்வாறு 8 நடைமுறைகளை பின்பற்றினால் வாடிக்கையாளர்கள் பதிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு உறுதி செய்யப்படும். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை.இந்த முறையில் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் கியாஸ் புக்கிங் செய்யலாம்.

கைபேசியில், 1-ம் இடத்தில் இருந்த தமிழ் 9-ம் இடத்தில்?

இதில் தமிழுக்கு 1-ம் நம்பர் இடம் தரப்பட்டிருந்தது. தற்போது கைபேசியில் கடைசி எண்ணான 9-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எண் – 1 ஐ அழுத்தினால் இப்போது இந்தி வருகிறது. மத்திய அரசின் இந்த மாறுபாட்டால் கிராமத்து மக்கள் மிகவும் குழம்பிய நிலையில் உள்ளனர். கியாஸ் பதிவின் போது 1-ல் இருந்த தமிழை எதற்காக 9-ம் இடத்திற்கு தள்ளினார்கள் இதற்கான அறிவிப்பு செய்யாதது ஏன் என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன