‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம்மில் தமிழ்மொழி இடம்பெறவில்லை’ : பொதுமக்கள் அதிருப்தி!

‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம்மில் தமிழ்மொழி இடம்பெறவில்லை’ : பொதுமக்கள் அதிருப்தி!

காரைக்கால் ஏடிஎம் ஒன்றில் தமிழ் மொழி இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. ஆனாலும் ஏதோ ஒருவகையில் இந்தி திணிப்பு நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது என சமூக அமைப்புகளும், தமிழக அரசியல் தலைவர்களும் கூறி வருகிறார்கள் . இதன் எதிரொலியாக மத்திய அரசின் மும்மொழி கொள்கையை தமிழக அரசு கடுமையாக எதிர்த்தது. விமான நிலையத்தில் இந்தி மொழி தெரியாததால் திமுக எம்.பி. கனிமொழி, தேசிய விருது இயக்குநர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என பலரும் இந்தி திணிப்பின் கோர முகத்தை பகிர்ந்து கொண்டனர்.

‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம்மில் தமிழ்மொழி இடம்பெறவில்லை’ : பொதுமக்கள் அதிருப்தி!

இந்நிலையில் காரைக்கால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம்மில் ஆங்கிலம், இந்தி மட்டுமே உள்ளது. தமிழ் மொழி இடம்பெறவில்லை. இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு இதனால் பிரச்சினை இல்லை. ஆனால் தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கு ஏடிஎம்மை கையாளுவது எப்படி என்பது எட்டாக்கனியாக மாறிவிடும் என பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம்மில் தமிழ்மொழி இடம்பெறவில்லை’ : பொதுமக்கள் அதிருப்தி!

முன்னதாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கங்கைகொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த மருத்துவருக்கு இந்தி தெரியாததால் வங்கிக்கடன் தரமறுத்ததும் இந்தியன் ஓவர் சீஸ் வங்கி கிளையில் தான் என்பது நினைவுகூறத்தக்கது.