செம்மொழியான தமிழ் மொழி படித்தோருக்கு வாய்ப்பு மறுப்பு!

 

செம்மொழியான தமிழ் மொழி படித்தோருக்கு வாய்ப்பு மறுப்பு!

மத்திய அரசால் தொடர்ந்து புறக்கணித்து வரும் தமிழ் மொழி தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான கல்வித் தகுதியில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான அறிவிக்கையை மத்திய தொல்லியல் துறை இன்று வெளியிட்டது. இப்படிப்பிற்கான கல்வித் தகுதியில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழ் மொழி இடம் பெறவில்லை. மத்திய தொல்லியல் துறையின் இந்த தமிழ் புறக்கணிப்பு விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

செம்மொழியான தமிழ் மொழி படித்தோருக்கு வாய்ப்பு மறுப்பு!

இதையடுத்து, செம்மொழியான தமிழ் மொழி படித்தோருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதா என மத்திய அரசுக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் , “மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான கல்வித் தகுதியில், செம்மொழி வரிசையில் தமிழ் இல்லை. இது கடும் கண்டனத்திற்குரியது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்திய கலாசாரத்தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு மொத்தம் 16 பேர் கொண்ட அக்குழுவை அமைத்தது. அதிலும் ஒருவர் கூட தென்னிந்தியர் இல்லை என்பது குறிப்பிடதக்கது.