‘பேரறிவாளனை விடுவிக்க வேண்டும்’ – குரலெழுப்பும் தமிழ் திரையுலகினர்!

 

‘பேரறிவாளனை விடுவிக்க வேண்டும்’ – குரலெழுப்பும் தமிழ் திரையுலகினர்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ் திரையிலகினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

‘பேரறிவாளனை விடுவிக்க வேண்டும்’ – குரலெழுப்பும் தமிழ் திரையுலகினர்!

நளினி, முருகன், ராபர்ட் பயாஸ், பேரறிவாளன் உட்பட 7 பேர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுத்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தும், ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. குறிப்பாக, இந்த வழக்கில் நேரடி தொடர்பு இல்லாத பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

‘பேரறிவாளனை விடுவிக்க வேண்டும்’ – குரலெழுப்பும் தமிழ் திரையுலகினர்!

இந்த நிலையில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “ஒரு குற்றமும் செய்யாத மனிதனுக்கு 30 ஆண்டுகள் சிறை.. தனது மகனைத் திரும்பப் பெற ஒரு தாயின் 30 வருட போராட்டம். இவர்களுக்கு தமிழக முதல்வர், ஆளுநர் நீதி வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கிறோம். தயவுசெய்து இனியாவது தாயும் மகனும் ஒரு சுதந்திரமான வாழ்க்கையை வாழ விடுங்கள்” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

‘பேரறிவாளனை விடுவிக்க வேண்டும்’ – குரலெழுப்பும் தமிழ் திரையுலகினர்!

அதே போல நடிகர் பார்த்திபனும் தனது ட்விட்டர் பக்கத்தில், “அற்புதம் அம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காதக் குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும்,துயரமும் அளவிட முடியாதது. விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால்,அது உடனடியாக நிகழ வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன்” என குறிப்பிட்டுள்ளார்.

‘பேரறிவாளனை விடுவிக்க வேண்டும்’ – குரலெழுப்பும் தமிழ் திரையுலகினர்!

நடிகர் பிரகாஷ் ராஜும் தனது ட்விட்டர் பக்கத்தில், ” தீர்ப்புக்குப் பின்னும் மறுவிசாரணைக்கான சட்டங்கள் நம் நாட்டில் இருக்குமானால், இந்த அதிகாரியின் வாக்குமூலத்தையடுத்து பேரறிவாளன் சட்டப்படி குற்றமற்றவராக விடுதலையாகி இருப்பார். ஆனால் அவருடைய விடுதலைக்காக நடைமுறையில் இருக்கும் சட்டங்களையே நம்பவேண்டியிருக்கிறது” என பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் விஜய் சேதுபதியும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து, பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார். இவ்வாறு தமிழ் திரையுலகினர் பலர் பேரறிவாளனின் விடுதலைக்காக குரல் எழுப்பி வருகின்றனர்.