தொல்லியல் படிப்புக்கான செம்மொழி பட்டியலில் தமிழ் சேர்ப்பு; மு.க ஸ்டாலின் வரவேற்பு!

தொல்லியல் படிப்புக்கான செம்மொழி பட்டியலில் தமிழ் சேர்ப்பு; மு.க ஸ்டாலின் வரவேற்பு!

செம்மொழி பட்டியலில் தமிழ் இணைக்கப்பட்டதற்கு வரவேற்பு அளிப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய தொல்லியல் துறையின் பட்டயப் படிப்பிற்கான தகுதியில் தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது. கடும் கண்டனத்திற்குப் பிறகு தமிழ் இணைக்கப்பட்டிருக்கிறது. வரவேற்கிறேன்! மொழிகளே, பன்முகத்தன்மையின் பண்பாட்டு அடித்தளங்கள்! இனியும் மாற்றாந்தாய் மனப்போக்கை கடைப்பிடிக்க வேண்டாம்.” என குறிப்பிட்டுள்ளார்.

தொல்லியல் படிப்புக்கான செம்மொழி பட்டியலில் தமிழ் சேர்ப்பு; மு.க ஸ்டாலின் வரவேற்பு!

முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்தில் முதுகலை படிப்புக்கு விண்ணப்பவர்களுக்கான பட்டியலில் தமிழை தவிர மற்ற அனைத்து செம்மொழிகளும் இடம்பெற்றிருந்தது. இதற்கு தமிழகத்தை சேர்ந்த பலரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழ் இணைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.