kaappan-mobile kaappan-large
  • September
    17
    Tuesday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


'கார்த்தியுடன் உறவு வைத்து கொள்ளவில்லை': நடிகை தமன்னா ஓபன் டாக்! 

தமன்னா-கார்த்தி
தமன்னா-கார்த்தி
Loading...

தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாகிப் பிரபலமானவர் நடிகை தமன்னா. தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்த இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார். அதிலும் குறிப்பாக இவர் கார்த்தியுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த பையா படத்திலிருந்து தான் இவர்கள் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அது எதுவும் உண்மை இல்லை என்று தமன்னா தெரிவித்தார். 

இந்நிலையில் அவர் மறுப்பு தெரிவித்தும் அந்த செய்தி இன்னும் அடங்கிய பாடு இல்லை. தற்போது அது குறித்து தெலுங்கு ஊடகம் ஒன்றிக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், 'நானும், கார்த்தியும் நட்பு அடிப்படையில் கூட உறவு வைத்து கொள்ளவில்லை. ஒரு நடிகையாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எனது கடமை. பையா படத்தில் எனக்கும், கார்த்திக்கும் இடையே இருந்த ஜோடிப் பொருத்தம் தான் மக்களை அப்படி பேச வைத்தது. 

tamana

கார்த்தியை வெறும் சக நடிகராக மட்டுமே பார்த்தேன். மற்றபடி அவருடன் நான் நட்பு ரீதியாகக் கூட நெருங்கி பழகியது இல்லை. நான் காதலில் விழுந்தால் அதை மறைக்காமல் அனைவரிடமும் பகிர்ந்துகொள்வேன். என் காதலை பற்றி முதலில் சொல்லுவது நானாகத் தான் இருப்பேன். எனது ரசிகர்களுடன் அதை பகிர்ந்து கொள்வது தான் எனக்கு மகிழ்ச்சி’ என்று கூறியுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.