ஆப்கான் பெண்கள் வேலைக்கு வர தடை… காற்றில் பறக்கவிடப்படும் தலிபான்களின் வாக்குறுதிகள்!

ஆப்கான் பெண்கள் வேலைக்கு வர தடை… காற்றில் பறக்கவிடப்படும் தலிபான்களின் வாக்குறுதிகள்!

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதிகாரத்தை வந்தடைந்திருக்கிறார்கள் தலிபான்கள். மூன்று வாரங்களுக்கு முன்பு தலைநகர் காபூலைக் கைப்பற்றிய அவர்கள், தாங்கள் முன்பு போல இல்லை; இப்போது திருந்திவிட்டதாகக் கூறினார். அதேபோல தங்கள் ஆட்சியில் பெண்கள் வேலைக்குச் செல்ல, கல்வி கற்க என எதற்கும் தடை விதிக்க மாட்டோம் என சத்தியம் செய்யாத குறையாக கூறினர். அதேபோல அரசுப் பணிகளில் இருக்கும் பெண்கள் அனைவரும் பணிக்குத் திரும்பவும் உத்தரவிட்டார்கள்.

ஆப்கான் பெண்கள் வேலைக்கு வர தடை… காற்றில் பறக்கவிடப்படும் தலிபான்களின் வாக்குறுதிகள்!

ஆனால் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி நடைபெறும் என்றார்கள். அதுவே எங்கள் அரசியலமைப்புச் சட்டம் என்றார்கள். தலிபான்கள் பசுத்தோல் போர்த்திய நரிகள் என அப்போதே புரிந்துவிட்டது. தலிபான்களுக்கென்று மற்றொரு பிறவிக்குணமும் இருக்கிறது. அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளைக் காற்றில் மட்டுமே எழுத முடியும். எப்போது வேண்டுமானாலும் மறைந்து போகலாம். அதனை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்கள். சமீபத்தில் அரசியலிலும் விளையாட்டிலும் ஆப்கானிஸ்தான் பெண்கள் பங்கேற்க தடைவிதிப்பதாக அறிவித்தனர்.

ஆப்கான் பெண்கள் வேலைக்கு வர தடை… காற்றில் பறக்கவிடப்படும் தலிபான்களின் வாக்குறுதிகள்!

அதேபோல ஆப்கானிஸ்தானில் உயர்நிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், மாணவிகளும், ஆசிரியைகளும் பள்ளிக்கு வரக்கூடாது என்று தலிபான்கள் உத்தரவிட்டனர். இச்சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை பெண்கள் விவகாரங்கள் துறை அமைச்சகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அரசு கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் அந்த அமைச்சகமும் இழுத்து மூடப்பட்டு விட்டது. அமைச்சகத்திற்கு வெளியே இருந்த பெயர்ப்பலகை அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக புதிதாக அறநெறி அமைச்சகம் என்ற பெயரிலான பலகை பொருத்தப்பட்டுள்ளது. தற்போது காபூலிலில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் பணிக்கு வருவதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

ஆப்கான் பெண்கள் வேலைக்கு வர தடை… காற்றில் பறக்கவிடப்படும் தலிபான்களின் வாக்குறுதிகள்!
ஆப்கான் பெண்கள் வேலைக்கு வர தடை… காற்றில் பறக்கவிடப்படும் தலிபான்களின் வாக்குறுதிகள்!

பெண்களால் மட்டுமே செய்யக்கூடிய பணிகளுக்கு மட்டுமே அவர்கள் இனி அனுமதிக்கப்படுவார்கள் என இடைக்கால மேயர் ஹம்துல்லா நமோனி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்மூலம் பெண்கள் மீதான அடக்குமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக தலிபான்கள் அமல்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. தாங்கள் மீண்டும் இருண்ட காலம் நோக்கி பயணிப்பது போல தெரிகிறது என அங்குள்ள பெண்கள் கவலை தெரிவிக்கின்றனர்.