ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் போட்டி ஒளிபரப்ப தடை விதித்த தாலிபான்கள்!!

 

ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் போட்டி ஒளிபரப்ப தடை விதித்த தாலிபான்கள்!!

ஐ.பி.எல். போட்டியை ஒளிபரப்பக் கூடாது என ஆப்கானிஸ்தான் ஊடகங்களுக்கு தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் போட்டி ஒளிபரப்ப தடை விதித்த தாலிபான்கள்!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியமைத்தது முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றனர். குறிப்பாக பெண்கள் விளையாட்டில் சேரக்கூடாது, பள்ளிக்கு செல்லக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவருகின்றன. பெண்களுக்கான உரிமைகளை பறித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. அனைத்து நாடுகளிலும் ஐ.பி.எல் போட்டிகளை தொலைக்காட்சியில் ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர். ஐ.பி.எல் போட்டிகளை திருவிழா போல பெண்கள், சிறியவர்கள், ஆண்கள் என அனைவரும் கொண்டாடிவருகின்றனர்.

இந்நிலையில் பெண்கள் போட்டியை பார்ப்பதாலும், ரசிகர்கள் ஆட்டம் போடுவதாலும் ஐ.பி.எல். போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்பக்கூடாது என்று ஊடகங்களுக்கு தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பது இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானது என்றும் தாலிபான்கள் தெரிவிக்கின்றனர்.