“யூ ட்யூப நம்பி, ஊசியில் அதையா வச்சி போடுவே” -நினைவு திறனை அதிகரிக்க பண்ண பரிசோதனை.

 

“யூ ட்யூப நம்பி, ஊசியில் அதையா வச்சி போடுவே” -நினைவு திறனை அதிகரிக்க பண்ண பரிசோதனை.


மாணவர்களின் நினைவு திறனை அதிகரிக்க, யு டியூபில் பார்த்த சில பொருட்களை ஊசியில் வைத்து மாணவர்களை டெஸ்ட் செய்த ஒரு டெல்லி யூனிவர்சிட்டி மாணவரை பொலிஸார் கைது செய்தனர் .

“யூ ட்யூப நம்பி, ஊசியில் அதையா வச்சி போடுவே” -நினைவு திறனை அதிகரிக்க பண்ண பரிசோதனை.


கிழக்கு டெல்லியில் உள்ள மண்டவாலியில் வசிப்பவர் டெல்லி யுனிவர்சிட்டியின் இரண்டாம் ஆண்டு பி.ஏ மாணவர் சந்தீப்.இவர் அடிக்கடி யூ ட்யூப் பார்க்கும் பழக்கமுள்ளவர் .அதனால் யூ ட்யூபில் வருவதையெல்லாம் உண்மையென்று நம்பி அதை செயல் படுத்தும் பழக்கமுள்ளவர் .அப்படி ஒருநாள் அவர் யூ ட்யூபில் மாணவர்களின் நினைவு திறனை மேம்படுத்த உப்புக்கரைசலை ஊசியில் வைத்து அதை மாணவர்களுக்கு செலுத்தினால் அவர்களின் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று பார்த்தார் .அதனால் அதை சில மாணவர்களிடம் செயல்படுத்த முடிவு செய்தார்
அதன் படி அவரிடம் 6முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் பல மாணவர்கள் ட்யூஷன் படிக்கிறார்கள் .அதனால் அவர் ஒரு சில மாணவர்களுக்கு அந்த உப்புக்கரைசல் கொண்ட ஊசியை செலுத்தினார் .இந்த ஊசி போட்டதை பற்றி அந்த மாணவர்கள் தங்களின் பெற்றோரிடம் கூறினார்கள் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெற்றோர்கள் அந்த வாலிபரின் செயலை பார்தது பயந்து போய் அங்குள்ள காவல் நிலையத்தில் அவர் மீது புகாரளித்தார்கள் .
அந்த பெற்றோர்களின் புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த வாலிபர் சந்தீப் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தார்கள் .அப்போது அந்த சந்தீப் செய்த செயல் பற்றி அறிந்து கொண்டார்கள் .அது உண்மைதான் என்று ஊர்ஜிதம் ஆனதும் , அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார்கள் .அதன்பேரில் அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள். இந்த ஊசியால் எந்த மாணவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கண்டறிந்தார்கள் .

“யூ ட்யூப நம்பி, ஊசியில் அதையா வச்சி போடுவே” -நினைவு திறனை அதிகரிக்க பண்ண பரிசோதனை.