அமைச்சர் என்பதற்காக சலுகை எடுத்துக்கொள்வதா? செந்தில்பாலாஜி மீது நீதிபதி காட்டம்

 

அமைச்சர் என்பதற்காக சலுகை எடுத்துக்கொள்வதா? செந்தில்பாலாஜி மீது நீதிபதி காட்டம்

தமிழ்நாடு மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது சென்னை சிறப்பு நீதிமன்றம்.

அமைச்சர் என்பதற்காக சலுகை எடுத்துக்கொள்வதா? செந்தில்பாலாஜி மீது நீதிபதி காட்டம்

கடந்த 2011 -15 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது. அரசு வேலை வாங்கித் தருவதாக சொல்லி 81 பேரிடம் 1.62 கோடி மோசடி செய்து உள்ளார் என்று கணேஷ்குமார், தேவசகாயம் அருண்குமார் உள்ளிட்டவர்கள் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

இந்த மூன்று வழக்குகளில் ஒரு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்றுவிட்டார் செந்தில்பாலாஜி. உயர் நீதிமன்றத்தின் மூலம் மீதமுள்ள இரண்டு வழக்குகளில் 47 பேர் மீதான குற்றப்பத்திரிகையை வழங்குவதற்காக சென்னை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் இன்று விசாரித்தது.

அமைச்சர் என்பதற்காக சலுகை எடுத்துக்கொள்வதா? செந்தில்பாலாஜி மீது நீதிபதி காட்டம்

நீதிபதி அலிசியா முன்பு இந்த விசாரணை நடந்தது. விசாரணையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை தவிர மற்ற அனைவரும் ஆஜராகி இருந்தனர். அவர் ஏன் ஆஜராகவில்லை என்று நீதிபதி கேட்டபோது, அவருக்கு துறை சார்ந்த கூட்டங்கள் இருப்பதால் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இன்று ஒருநாள் அவள் ஆஜராக விலக்கு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையை பத்து நாட்களுக்கு பிறகு தள்ளி வைத்தால் அப்போது அமைச்சர் நிச்சயமாக நேரில் ஆஜராவார் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது நீதிபதி அலிசியா, இதேபோல ஒரு காரணத்தை அடுத்த முறையும் சொல்ல மாட்டீர்கள் என்று எப்படி நம்புவது? என்று கேட்டுவிட்டு, குற்றப்பத்திரிக்கை நகல் தானே கொடுக்கப் போகிறேன். நேரில் ஆஜராகி வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே. அமைச்சர் என்பதற்காக சலுகை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று காட்டமாக சொன்னார்.

அமைச்சர் என்பதற்காக சலுகை எடுத்துக்கொள்வதா? செந்தில்பாலாஜி மீது நீதிபதி காட்டம்

பின்னர், வழக்கை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டால் வழக்கு தொடர்ந்தவர்கள் புகாரை திரும்பப் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, அதனை ஏற்றுக்கொண்டு உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இதற்கான நகலை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அரசுக்கு கால அவகாசம் அளித்தார்.