• July
    17
    Wednesday

Main Area

Main



புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இவரை எடுங்கள்; இந்திய அணிக்கு சச்சின் அட்வைஸ் !!

புவனேஷ்வர்
புவனேஷ்வர்
Loading...

காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக முகமது ஷமிக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

sachin

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை விளையாடிய மூன்று அனைத்து போட்டிகளிலும் அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி சனிக்கிழமை நடைபெறும் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. 
பாகிஸ்தான் அணியுடனான கடந்த போட்டியின் போது காயமடைந்த புவனேஷ்வர் குமார் அடுத்த இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் இருந்து விலகியது இந்திய அணி பின்னடைவாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக முகமது ஷமியை அணியில் எடுக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 

shami and bhuneshwar

இது குறித்து பேசிய அவர், நாம் எதிர்பார்ப்பதை விட ஷமி மிகச்சிறந்த பந்துவீச்சாளர், அடுத்த போட்டிகளில் ஷமி அணியில் இடம்பெறும் பட்சத்தில் அவர் எதிரணிகளுக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார் என்று கருதுகிறேன். அவரின் பந்துவீச்சில் ஒரு தனித்துவம் உள்ளது. புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக முகமது ஷமிக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கலாம் என்பது என கருத்து என்று தெரிவித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.