• August
    21
    Wednesday

Main Area

Main



ரத்தக் கொதிப்பு மாத்திரை சாப்பிட்டால் கேன்சரா? என்னய்யா அநியாயமா இருக்கு!

Tablets
Tablets
Loading...

Valisure என்ற அமெரிக்க ஆன்லைன் மருந்து நிறுவனம், அந்நாட்டு உணவு மற்றும் மருந்துகளை கண்காணிக்கும் அமைப்புக்கு புகார் ஒன்றை அனுப்பி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தத்திற்கான மருந்தாக இந்தியாவிலும் அமெரிக்காவிலும் அதிகம் பரிந்துரைக்கப்படும் Valembic மற்றும் Diovan மாத்திரைகளில், புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், இதுகுறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து இறுதி முடிவு எடுக்கும்படியும், அமெரிக்க ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனம் கேட்டுகொண்டுள்ளது.

Caution for BP tablets

 மேற்கண்ட இரண்டு மாத்திரைகளிலும் Valsartan என்ற வேதிப்பொருள் இருப்பதாகவும், இது ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இதய நோய்கள் அண்டாமல் செய்வதாகவும் விளம்பரம் செய்யப்படுகிறது. இந்தியாவில் எட்டில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது. நாளும் உயர்ந்துகொண்டே போகும் பெட்ரோல் மற்றும் விலைவாசியை எல்லாம் கணக்கில் கொண்டால், எட்டில் எல்லாருக்குமே ரத்தக் கொதிப்பு வருவதற்கு நாளாகாது. எனவே, Valsartan வேதிப்பொருள் அடங்கிய Valembic மற்றும் Diovan மாத்திரைகளை தெரிந்தவர்/உறவினர் யாரேனும் எடுத்துக்கொள்வது தெரியவந்தால், ஒரு முறைக்கு இருமுறை குடும்ப டாக்டரிடம் இந்த செய்தியைச் சொல்லி உறுதிபடுத்திக்கொள்வது நல்லது.

2018 TopTamilNews. All rights reserved.