கிரிக்கெட் கடவுள் சச்சின் தாக்கப்பட்டாரா? – உள்ளே விவரம்!

 

கிரிக்கெட் கடவுள் சச்சின் தாக்கப்பட்டாரா? – உள்ளே விவரம்!

பாப் பாடகி ரிஹானாவின் விவசாயிகள் ஆதரவு ட்வீட்டைக் கண்டித்து கிரிக்கெட்டர்கள் சச்சின், கோலி உள்ளிட்டவர்கள் ட்வீட் செய்திருந்தார்கள். அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நடிகை டாப்ஸி செய்த ட்வீட்டுக்கு ஆதரவு பெருகிவருகிறது.

கிரிக்கெட் கடவுள் சச்சின் தாக்கப்பட்டாரா? – உள்ளே விவரம்!

டெல்லி விவசாயிகள் போராட்டம் தேசிய அளவில் கவனம் பெற்றாலும், சர்வதேச அளவில் கவனம் பெறவில்லை. இச்சூழலில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகியான ரிஹானா, விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு ட்வீட் செய்தார். இந்த ட்வீட் தான் அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாக உள்ளது. மத்திய அரசு அறிக்கை விடும் அளவிற்கு களம் தகிக்கிறது. ரிஹானாவைத் தொடர்ந்து சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், நடிகை மியா கலிபா உள்ளிட்ட பிரபலங்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்ய உலக மக்களின் கேள்விகள் இந்திய அரசை நோக்கி எழுந்துள்ளது.

ரிஹானாவிற்கு இஸ்லாமிய பயங்கரவாதி பட்டத்தையும் பாஜக ஆதரவாளர்கள் வழங்கிவிட்டனர். ரிஹானாவின் மதம் என்ன என்பதே கூகுள் தேடுபொறியில் அதிகம் தேடப்பட்ட கீவேர்டாக இருக்கிறது. ரிஹானாவின் கருத்து ஆதரவு பெருகியதும் இந்திய செலிபிரிட்டிகள், கிரிக்கெட்டர்களை மத்திய அரசு களமிறக்கியதாகத் தெரிகிறது. சச்சின், கோலி உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும் கங்கனா ரனாவத் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் #indiaagainstpropaganda என்ற ஹேஸ்டேக்கில் மத்திய அரசுக்கு ஆதரவாக ட்வீட் செய்து, வெளிநாட்டு பிரபலங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட கூடாது என்று கண்டித்தனர்.

குறிப்பாக சச்சின், “இந்தியாவின் இறையாண்மையில் சமரசம் செய்து கொள்ள முடியாது. வெளிநாட்டவர்கள் பார்வையாளர்களாக இருக்கலாமே தவிர பங்கேற்க முடியாது. இந்தியர்களுக்கு இந்தியாவைத் தெரியும். இந்தியர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். ஒரு தேசமாக இணைந்திருப்போம்” என்று ட்வீட் செய்திருந்தார். கிரிக்கெட் கடவுளாக இருந்த சச்சின் தேவையில்லாமல் ரத்த பூமியான அரசியல் விவகாரங்களுக்குள் இறங்கியதன் விளைவு மீம்ஸ்களால் வறுத்தெடுக்கப்படுகிறார்.

கிரிக்கெட் கடவுள் சச்சின் தாக்கப்பட்டாரா? – உள்ளே விவரம்!

இச்சூழலில் நடிகை டாப்ஸி, கிரிக்கெட்டர்களின் பதிவுகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக மொத்த பர்னிச்சரையும் சல்லி சல்லியாக உடைத்துவிட்டார். அவர் செய்த ட்வீட்டில், “ஒரு ட்வீட் உங்களின் ஒற்றுமையையும், ஒரு ஜோக் உங்கள் நம்பிக்கையையும், ஒரு நிகழ்ச்சி உங்களது மத நம்பிக்கையும் படபடக்க வைத்தால், நீங்கள் தான் உங்களின் நம்பிக்கையை வலிமையாக்கி கொள்ள வேண்டும். அதை விடுத்து அனைவருக்கும் கொள்கை விளக்க பாடம் நடத்தாதீர்கள் கொள்கை பிரச்சார ஆசிரியர்களே!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் படுகொலைக்கு ஆதரவாக உலகமே ‘Black Lives Matter’ என்ற ஒற்றைக் குடையின் கீழ் ஒன்றிணைந்ததால் தான் நீதி பிறந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆகச்சிறந்த நகைமுரண் என்னவென்றால், இன்று வெளிநாட்டவர்களை இந்தியாவின் விவகாரங்களில் கருத்து சொல்லக் கூடாது என்று கண்டிக்கும் சச்சின் போன்றவர்கள் அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்களின் வன்முறையைக் கண்டித்தார்கள். அப்போது தெரியவில்லை அது அமெரிக்காவின் உள்நாட்டு விவகாரம் என்று?