நான் கேட்பேன்- னு சொன்னீங்களே! நீங்களுமா கமல் சார் இப்படி?

 

நான் கேட்பேன்- னு சொன்னீங்களே! நீங்களுமா கமல் சார் இப்படி?

தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட கமல் உருவம் பதித்த டி- ஷர்ட்டுகள், டிபன் பாக்ஸ்களை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்த உடனேயே அதிகாரிகளின் சோதனையும் சூடுபிடித்துவிடும். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்க சாலைகளில் செல்லும் வாகனங்களை மறித்து போலீசார், அதிகாரிகள் குழுவால் 24 மணி நேர சோதனைகள் நடத்தப்படும். இவ்வாறு சோதனைகள் நடைபெறும்போது அந்த காட்சிகள் முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுவருகின்றன.

நான் கேட்பேன்- னு சொன்னீங்களே! நீங்களுமா கமல் சார் இப்படி?

இந்நிலையில் கடலூர் மாவட்டம் பெரிய காட்டுப்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை அதிகாரிகள்,சிறிய ரக சரக்கு வாகனத்தில் கமல்ஹாசன் உருவம் பதித்த டி.ஷர்ட்டுகள், டிபன் பாக்ஸ்களை மூட்டையாக கட்டி எடுத்து செல்லப்பட்டவற்றை கைப்பற்றினர். அவை புதுச்சேரி ஏம்பலம் பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டு விநியோகிக்கவிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.