நடராஜனுக்கு முழங்காலில் திடீர் அறுவைச் சிகிச்சை!

 

நடராஜனுக்கு முழங்காலில் திடீர் அறுவைச் சிகிச்சை!

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பட்டையைக் கிளப்பினார் சேலத்தைச் சேர்ந்த நடராஜன். டிவில்லியர்ஸ், தோனி என வரிசையாக ஜாம்பவான்களைக் காலி செய்து பேமஸ் ஆனார். டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்ற பெருமையையும் பெற்றார். இதன்மூலம் அவர் சர்வதேச இந்திய அணிக்குள் நுழைந்தார்.

நடராஜனுக்கு முழங்காலில் திடீர் அறுவைச் சிகிச்சை!

ஆஸ்திரேலியா டூருக்கு அணியுடன் நெட் பவுலராக சென்ற நடராஜனுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்க அதிலும் தான் யாரென்று நிரூபித்துக் காட்டிவிட்டார். இந்திய வீரர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவே கொண்டாடி தீர்த்தது. கோலியும் வெற்றிக் கோப்பை நடராஜன் கையில் கொடுத்து அழகு பார்த்தார். இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முக்கியமான இக்கட்டான ஆட்டத்தில் எல்லாம் நடராஜனை அணிக்குள் கொண்டுவந்து வெற்றிகளைத் தேடிக் கொண்டார் கேப்டன் கோலி.

நடராஜனுக்கு முழங்காலில் திடீர் அறுவைச் சிகிச்சை!

நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் இரு போட்டிகளில் ஆடிவந்த நடராஜன் ஒருசில ஆட்டங்களில் களமிறக்கப்படவில்லை. அவரின் முழங்காலில் காயம் காரணமாகத் தான் ஆடவில்லை என அணி நிர்வாகம் கூறியது. பின்னர் சிறிது நாளுக்குப் பின் நடராஜன் அணியிலிருந்து விலகினார். நடராஜனின் காயத்தை ஆய்வு செய்த பிசிசிஐ மருத்துவக் குழுவினர், அவருக்கு முழங்காலில் சிறிய அறுவைச் சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர். அதன்படி இன்று அவருக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிக்கரமாக நடந்து முடிந்தது.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடராஜன், “இன்று எனக்கு முழங்கால் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. என்னைக் கனிவுடன் கவனித்துக் கொண்ட மருத்துவக் குழுவினர், அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி. பிசிசிஐ அமைப்புக்கும், நான் குணமடைய வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டிருக்கிறார்.