வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கு பாடங்கள் குறைப்பு!

 

வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கு பாடங்கள் குறைப்பு!

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பள்ளிகள் 3 மாதங்களாக மூடியிருக்கின்றன. இந்நேரம் பள்ளிகள் தொடங்கி பாடங்கள் நடத்த வேண்டிய நிலையில், மாணவர்களும் ஆசிரியர்களும் வீட்டில் முடங்கியுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஒரு பக்கம் கவனம் செலுத்தினாலும், மறுபுறம் நிலைமையை எப்படி சீர் செய்வது என்ற யோசித்துக்கொண்டிருக்கின்றனர். ஏராளமான கல்வி நிலையங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கு பாடங்கள் குறைப்பு!

இந்நிலையில் தொடர் விடுமுறையால் வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டுமென மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கோரிக்கை எழுப்பியதையடுத்து எவ்வாறு குறைப்பது என்பது தொடர்பாக #SyllabusForStudents2020 என்ற ஹேஷ்டேகில் ஆலோசனை வழங்குமாறு கல்வி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் பாடங்களை குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும், ஆசிரியர்களும் கல்வியாளர்களும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ளுமாறும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், வேண்டும்கோள் விடுத்துள்ளார்.