தமிழக டிஜிபியாக சைலேந்திரபாபு இன்று பதவி ஏற்பு!

 

தமிழக டிஜிபியாக சைலேந்திரபாபு இன்று பதவி ஏற்பு!

தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள சைலேந்திரபாபு இன்று பதவி ஏற்கிறார்.

தமிழக டிஜிபியாக சைலேந்திரபாபு இன்று பதவி ஏற்பு!

டிஜிபி திரிபாதி இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் தமிழகத்தின் 30ஆவது டிஜிபியாக சைலேந்திரபாபு பதவி ஏற்கிறார்.கன்னியாகுமரி குழித்துறையில் பிறந்த சைலேந்திரபாபு 1987 ஆம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரி ஆனார்.எம்எஸ்சி வேளாண்மை., எம்பிஏ., பிஎச்டி பட்டப்படிப்புகளை முடித்துள்ளார் சைலேந்திரபாபு. கடலூர் திண்டுக்கல், சிவகங்கை, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி ஆக பணியாற்றி உள்ளார். செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட எஸ்பி ஆகவும் அடையாறு துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். சந்தன கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படையில் ஐஜியாக முத்திரை பதித்தவர்.

தமிழக டிஜிபியாக சைலேந்திரபாபு இன்று பதவி ஏற்பு!

முன்னதாக தமிழக காவல்துறையில் உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் தலைமை பதவியாக கருதப்படும் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக யாரை நியமிப்பது என தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வந்தது.இதில் ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு, தீயணைப்பு துறை டிஜிபி கரன் சின்ஹா மற்றும் டிஜிபி சஞ்சய் அரோரா ஆகியோர் பரிசீலனையில் இருந்தன. ஏழு பேர் கொண்ட பரிசீலனை பட்டியலில் கரன் சின்ஹா, சைலேந்திரபாபு , சஞ்சய் அரோரா ஆகியோர் இறுதிப் பட்டியலுக்கு தேர்வாகினர்.இதில் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு சைலேந்திரபாபு நியமிப்பதாக அறிவித்தார்.சைலேந்திரபாபு ஐபிஎஸ் அதிகாரியாக மட்டுமல்லாமல் இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் நீங்களும் ஐபிஎஸ் அதிகாரி ஆகலாம் ,சாதிக்க ஆசைப்படு, உடலினை உறுதிசெய்ய உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்