சிட்னி டெஸ்ட் – கேப்டன் ரஹானேக்கு காத்திருக்கும் 2 சாதனைகள்!

 

சிட்னி டெஸ்ட் – கேப்டன் ரஹானேக்கு காத்திருக்கும் 2 சாதனைகள்!

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரில் கேப்டன் பொறுப்பேற்று அணியை வழிநடத்தும் ரஹானேவுக்கு இரண்டு சாதனைகள் காத்திருக்கின்றன.

இந்தியா – ஆஸ்திரேலியா இரு அணிகளுக்கு இடையேயான, ஒருநாள் போட்டித் தொடரை 2:1 எனும் கணக்கில் ஆஸ்திரேலியாவும், டி20 போட்டித் தொடரை 2:1 எனும் கணக்கில் இந்தியாவும் வென்றது.

சிட்னி டெஸ்ட் – கேப்டன் ரஹானேக்கு காத்திருக்கும் 2 சாதனைகள்!

முதல் டெஸ்ட் போட்டியில் மோசமாக ஆடி தோற்றது இந்திய கிரிக்கெட் அணி. 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்தத் தோல்வியுடன் கேப்டன் விராட் கோலி இந்தியா திரும்பிவிட்டார். இரண்டாம் டெஸ்ட் போட்டியில் ரஹானே தலைமையிலான இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த வெற்றிக்கு ஒரே காரணம், கேப்டன் ரஹானே என்று அடித்துச் சொல்லலாம். கேப்டன் ரஹானே தன் பொறுப்புணர்ந்து சவாலன தம் பணியை எந்தக் குறையும் இல்லாமல் செய்து வருகிறார். குறிப்பாக, சிராஜ் மற்றும் அஸ்வினை சூழலுக்கு ஏற்ப பந்து வீச அழைத்த வியூகத்தைச் சொல்லலாம்.

இரு அணிக்கு இடையேயான மூன்றாம் டெஸ்ட் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் தொடங்க உள்ளது. இதற்கான ஆடும் 11 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துவிட்டது. தமிழகத்தின் நடராஜனுக்கு நாளைய போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட வில்லை.

சிட்னி டெஸ்ட் – கேப்டன் ரஹானேக்கு காத்திருக்கும் 2 சாதனைகள்!

அணி விவரம்: ரஹானேதான் கேப்டன். துணை கேப்டன் ரோஹித் ஷர்மா. சுப்னம் கில், புஜாரா, விஹாரி, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், பும்ரா, முகம்மது சிராஜ், நவ்தீப் சைனி. இவர்களில் சைனிக்கு நாளைய போட்டிதான் அறிமுகப் போட்டி.

டெஸ்ட் போட்டியில் இந்திய அளவில் மகேந்திர சிங் தோனி தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய் அணியை வெற்றிப்பெற வைத்ததே சாதனையாக இருக்கிறது. இந்நிலையில் ரஹானே ஏற்கெனவே மூன்று முறை டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமையேற்று வெற்றி பெற வைத்திருக்கிறார். சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வெற்றி பெற வைத்துவிட்டால் தோனியின் சாதனைக்கு இணையாகி விடுவார். நான்காம் டெஸ்ட் போட்டியிலும் இவர் தலைமையில் இந்திய அணி வென்று விட்டால் புதிய சாதனையைப் படைத்துவிடுவார்.

சிட்னி டெஸ்ட் – கேப்டன் ரஹானேக்கு காத்திருக்கும் 2 சாதனைகள்!

அடுத்து, ரஹானே ஆஸ்திரேலிய மண்னில் 797 ரன்கள் அடித்திருக்கிறார். நாளை தொடங்கும் போட்டியில் இன்னும் 203 ரன்களை ரஹானே அடித்துவிட்டால், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் 1000 ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலும் இவரும் இணைவார். என்ன செய்ய போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.