மது விநியோகத்தில் இறங்கிய ஸ்விக்கி, ஜோமட்டோ!… இங்கே இல்லை ஜார்கண்டில்

 

மது விநியோகத்தில் இறங்கிய ஸ்விக்கி, ஜோமட்டோ!… இங்கே இல்லை ஜார்கண்டில்

ஜார்கண்ட் மாநிலத்தில் மதுவை வீடு தேடிச் சென்று விநியோகிக்கும் வசதியை ஸ்விக்கி, ஜோமட்டோ நிறுவனங்கள் தொடங்கியுள்ளதால் குடிமகன்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஊரடங்கு காரணமாக நாடு முழுக்க கடைகள் மூடப்பட்டன. இதனால், மதுக் கடைகளும் மூடப்பட்டன. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் மதுக்கடைகளில் குடிமகன்கள் வரிசைகட்டி நிற்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆன்லைன் மது விற்பனையை அறிமுகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் கூட உத்தரவிட்டது.

மது விநியோகத்தில் இறங்கிய ஸ்விக்கி, ஜோமட்டோ!… இங்கே இல்லை ஜார்கண்டில்
இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் அரசின் அனுமதியோடு மதுபானங்களை வீட்டுக்கே வந்து டெலிவரி செய்யும் வசதியை ஸ்விக்கி, சொமட்டோ நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக முக்கிய நகரங்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் வெற்றியைத் தொடர்ந்து பிற மாநிலத்தின் மற்ற நகரங்களில் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம், மொபைல் ஆப் மூலம் தேவையான மது வகைகளை ஆர்டர் செய்துவிட்டால் போதும், அதை ஸ்விக்கி அல்லது சொமட்டோ ஊழியர்கள் எடுத்துவந்து வீட்டுக்கே டெலிவரி செய்துவிடுவார்கள். கூடவே, சைட்டிஷ்ஷையும் ஆர்டர் செய்தால் அதையும் கொண்டுவந்துவிடுவார்கள் என்பதால் குடிமகன்கள் உற்சாகத்தில் உள்ளனர்.