கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி!

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி!

ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தின் பெயரில் விமானத்தின் மூலம் பெங்களூருக்கு வந்த 30 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறையினர் கைப்பற்றி விசாரித்ததில் பெரும் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி!

இதன் பின்னணியில் கேரள முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்ட பலர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து அதிகாரிகள் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது அவர்கள் எர்ணாகுளம் காக்க நாடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஸ்வப்னா சந்தீப் இருவரையும் மேலும் நான்கு நாட்களுக்கு காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு  நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி!

இதனிடையே ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு திட்டமிட்டு செயல்பட்டதாக அவர்களின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி!

இதையடுத்து மீண்டும் ஸ்வப்னா ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் அவரின்  ஜாமீன் மனுவை கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.