போட்டுக்கொடுத்த ஸ்வப்னா! கலக்கத்தில் நகைக்கடை அதிபர்கள்!

போட்டுக்கொடுத்த ஸ்வப்னா! கலக்கத்தில் நகைக்கடை அதிபர்கள்!

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரிடம் தேசிய புலனாய்வு முகமை( என்.ஐ.ஏ) அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

போட்டுக்கொடுத்த ஸ்வப்னா! கலக்கத்தில் நகைக்கடை அதிபர்கள்!

கடத்தப்பட்ட 150 கிலோ தங்கத்தை யார் யாருக்கெல்லாம் கை மாற்றப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்ததில், கோவை பவிழம் வீதியில் இயங்கி வரும் ’ஸ்ரீ செந்தூர் ஜூவல்லர்ஸ்’ நகைக்கடைக்கு 18 கிலோ நகை கைமாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார் ஸ்வப்னா.

போட்டுக்கொடுத்த ஸ்வப்னா! கலக்கத்தில் நகைக்கடை அதிபர்கள்!

இந்த தகவலின் பேரில், கோவை ஸ்ரீ செந்தூர் ஜூவல்லர்ஸுக்கு சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள், நகைக்கடையின் உரிமையாளர் நந்தகோபாலிடம் விசாரணை நடத்தினர். அதே நேரத்தில் நந்தகோபாலின் வீட்டிலும் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ஸ்வப்னா சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களும், தங்க கட்டிகளும் கைப்பற்றப்பட்டன.

போட்டுக்கொடுத்த ஸ்வப்னா! கலக்கத்தில் நகைக்கடை அதிபர்கள்!

அப்போது நந்தகோபாலிடம் நடத்திய விசாரனையில், ‘’ஸ்வப்னாவிடம் இருந்து கடந்த சில மாதங்களில்10 கோடி மதிப்புள்ள 18 கிலோ தங்கம் பெற்றதாகவும், அதை நகைகளாக செய்து விற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதையடுத்து நந்கோபாலிடம் மேற்கொண்டு விசாரணை செய்வதற்காக அவரை திருவனந்தபுரம் அழைத்துச்சென்றுள்ளனர் என்.ஐ.ஏ. அதிகாரிகள்.

நந்தகோபால் சிக்கியதை அடுத்து, ஸ்வப்னாவிடம் தங்கம் வாங்கிய நகைக்கடை அதிபர்கள் எல்லாம் கலக்கத்தில் இருப்பதாக தகவல்.