காணும் பொங்கலில் கொசஸ்தலை ஆற்றில் சங்கமித்த சுவாமிகள்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு…

காணும் பொங்கலில் கொசஸ்தலை ஆற்றில் சங்கமித்த சுவாமிகள்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு…

திருவள்ளூர்

காணும் பொங்கலையொட்டி திருத்தணியில் சிவன், பெருமாள், விநாயகர் சுவாமிகள் சங்கமித்த நிகழ்வை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

காணும் பொங்கலில் கொசஸ்தலை ஆற்றில் சங்கமித்த சுவாமிகள்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு…

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த லட்சுமாபுரம் கொசஸ்தலை ஆற்றில், ஆண்டுதோறும் காணும் பொங்கல் தினத்தில் லட்சுமாபுரம், ஆற்காடு குப்பம், அருங்குளம், அரும்பாக்கம், குன்னத்தூர்‌ உள்ளிட்ட 8 கிராமங்களில் இருந்து பெருமாள், சிவன், விநாயகர் உள்ளிட்ட 7 சுவாமிகள் சந்தித்துகொள்வது வழக்கம். ஆனால், நடப்பாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 3 ஊர்களில் இருந்து மட்டும் சுவாமிகள் புறப்பாடு நடைபெற்றது. இதனையொட்டி, பெருமாள், சிவன் மற்றும் விநாயகர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் கிராமங்களில் இருந்து புறப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக லட்சுமாபுரம் கொசஸ்தலை ஆற்றுக்கு கொண்டுவரப்பட்டன.

காணும் பொங்கலில் கொசஸ்தலை ஆற்றில் சங்கமித்த சுவாமிகள்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு…

தொடர்ந்து, மூன்று சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. சுவாமிகள் சந்தித்துகொண்ட இந்த நிகழ்வில் திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 8 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர். மாலை 5 மணி தொடங்கி இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசனம் நடைபெற்ற நிலையில், பின்னர் சுவாமிகள் தங்களுடைய கிராமங்களுக்கு புறப்பட்டு சென்றன.