50 ஆண்டுகளுக்கும் மேலாக குகையில் வசித்து வரும் துறவி… ராமர் கோயில் கட்டுமானத்துக்கு ரூ.1 கோடி நன்கொடை

 

50 ஆண்டுகளுக்கும் மேலாக குகையில் வசித்து வரும் துறவி… ராமர் கோயில் கட்டுமானத்துக்கு ரூ.1 கோடி நன்கொடை

ரிஷிகேஷில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு குகையில் வசித்து வரும் துறவி ஒருவர், ராமர் கோயில் கட்டுமான பணிக்கு தனது பங்களிப்பாக ரூ.1 கோடி கொடுத்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உத்ரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் ஒரு குகையில் வசித்து வரும் 89 வயதான துறவி சுவாமி சங்கர் தாஸ் என்ற பக்காட் பாபா. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அந்த குகையில் சுவாமி சங்கர் தாஸ் வசித்து வருகிறார். அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு நன்கொடை திரட்டப்படும் செய்தியை அறிந்த துறவி சங்கர் தாஸ், ராமர் கோயில் கட்டுமான பணியில் தனது பங்களிப்பும் இருக்க வேண்டும் விரும்பினார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக குகையில் வசித்து வரும் துறவி… ராமர் கோயில் கட்டுமானத்துக்கு ரூ.1 கோடி நன்கொடை
ராமர் கோயில் (மாதிரி படம்)

இதனையடுத்து ரிஷிகேஷில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளைக்கு சென்று ராமர் கோயிலுக்கு ரூ.1 கோடியை காசோலை வடிவில் நன்கொடை வழங்கினார். துறவி ரூ.1 கோடி நன்கொடை வழங்குவதை பார்த்து வங்கி ஊழியர்கள் பிரமித்து விட்டனர். உடனே வங்கி அதிகாரிகள் அந்நகர விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினருக்கு தகவல் கொடுத்து வங்கிக்கு அவர்களை வரவழைத்தனர். அதன்பிறகு துறவி சங்கர் தாஸ் ரூ.1 கோடிக்கான காசோலையை அவர்களிடம் வழங்கினார். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு அதற்கான ரசீதை துறவி சங்கர் தாஸிடம் வழங்கியது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக குகையில் வசித்து வரும் துறவி… ராமர் கோயில் கட்டுமானத்துக்கு ரூ.1 கோடி நன்கொடை
விஷ்வ இந்து பரிஷத்

இது தொடர்பாக சுவாமி சங்கர் தாஸ் கூறுகையில், நான் இப்போது 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு குகையில் வசித்து வருகிறேன். இந்த முயற்சியை (நன்கொடை திரட்டும் திட்டம்) பற்றி நான் கேள்விப்பட்டேபோது, என் வாழ்நாள் கனவாக இருந்த ஒரு காரணத்திற்காக ஏன் நன்கொடை வழங்கக்கூடாது என்று நினைத்தேன் என்று தெரிவித்தார். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கூறுகையில், ராமர் கோயில் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை அளிக்க கோரிய சுவாமி சங்கர் தாஸ் குறித்து தகவல் கிடைத்ததும் நாங்கள் வங்கிக்கு சென்றோம். பணத்தை நேரடியாக நன்கொடையாக வழங்க முடியாததால், அவர் எங்களிடம் காசோலையை ஒப்படைத்தார். நாங்கள் அவருக்கு ரசீது கொடுத்தோம். வங்கி மேலாளர் பணத்தை அறக்கட்டளையில் சமர்ப்பிப்பார் என்று தெரிவித்தது.