ஹமீத் அன்சாரி மற்றும் அசாதுதீன் ஓவைசி பாகிஸ்தானியர்கள் போல் பேசுகிறார்கள்… சுவாமி சக்ரபாணி

 

ஹமீத் அன்சாரி மற்றும் அசாதுதீன் ஓவைசி பாகிஸ்தானியர்கள் போல் பேசுகிறார்கள்… சுவாமி சக்ரபாணி

ஹமீத் அன்சாரி மற்றும் அசாதுதீன் ஓவைசியும் பாகிஸ்தானியர்கள் போல் பேசுகிறார்கள் என்று அகில இந்திய இந்து மகாசபா தலைவர் சுவாமி சக்ரபாணி தெரிவித்தார்.

இந்தியாவின் முன்னாள் துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி கடந்த சில தினங்களுக்கு முன், கோவிட்-19க்கு முன்பே சமூகம் இரண்டு தொற்றுநோய்களுக்கு பலியாகி விட்டது. அதாவது மதவாதம் மற்றும் கடுமையான தேசியவாதம் என்று தெரிவித்து இருந்தார். ஹமீத் அன்சாரியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஹமீத் அன்சாரியின் கருத்துக்கு அகில இந்திய இந்து மகாசபா தலைவர் சுவாமி சக்ரபாணி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

ஹமீத் அன்சாரி மற்றும் அசாதுதீன் ஓவைசி பாகிஸ்தானியர்கள் போல் பேசுகிறார்கள்… சுவாமி சக்ரபாணி
சுவாமி சக்ர பாணி

ஹமீத் அன்சாரி மற்றும் அசாதுதீன் ஓவைசி அறிக்கைகளுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை. அவர்கள் பாகிஸ்தானியர்கள் போல் பேசுகிறார்கள். துணை குடியரசு தலைவராக பணியாற்றியவரான ஹமீத் அன்சாரியின் கருத்து கண்டிக்கத்தக்கது. ஹமீத் அன்சாரி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தனது கருத்தை வாபஸ் வாங்க வேண்டும்.

ஹமீத் அன்சாரி மற்றும் அசாதுதீன் ஓவைசி பாகிஸ்தானியர்கள் போல் பேசுகிறார்கள்… சுவாமி சக்ரபாணி
ஹமீத் அன்சாரி

பிரிவினைக்கு காரணமான முகமது அலி ஜின்னா பாதையை ஓவைசி பின் தொடருகிறார். இந்துக்களுக்கு ஒரு அச்சத்தை உருவாக்கி முஸ்லிம் வாக்களார்களை துருவப்படுத்த முயற்சிக்கிறார். இது போன்றவர்களை அறிந்து கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் மத்திய அரசிடம் கேட்டுக் கொள்கிறேன். முழு உலகமும் தங்கள் குடும்பம் என்ற கருத்தை இந்துக்கள் நம்புகிறார்கள். அத்தகைய மக்கள் (ஹமீத் அன்சாரி, அசாதுதீன் ஓவைசி) மீது முஸ்லிம் சமூக மக்கள் எந்த கவனமும் செலுத்த வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். எனவே மற்றொரு ஜின்னா இந்த நாட்டில் பிறக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.