“தூய்மை இந்தியா திட்டம்” – கழிப்பறைகள் கட்டியதில் மோசடியா?

 

“தூய்மை இந்தியா திட்டம்” – கழிப்பறைகள் கட்டியதில் மோசடியா?

மத்திய அரசின் வேணான் கடன் திட்டத்தில் மோசடி நடந்தது போல “தூய்மை இந்தியா திட்டத்தின்” கீழ் கழிப்பறைகள் கட்டுவதில் மோசடி நடந்துள்ளதாக பர,பரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2014 –ம் ஆண்டு அக்டோபா் 2-ம் தேதி பிரதமா் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது ‘தூய்மை இந்தியா திட்டம். இந்த திட்டம் மாகத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த ஆண்டையொட்டி நிறைவேற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து அறிவிக்கப்பட்ட திட்டம் ஆகும்.

“தூய்மை இந்தியா திட்டம்” – கழிப்பறைகள் கட்டியதில் மோசடியா?


2016-ல் தூய்மை இந்தியா திட்டம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்ட போது இந்தியாவிலுள்ள 53 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகளில் கழிப்பறை இல்லாத நிலைமை காணப்பட்டது. குறிப்பாக 70 சதவீத இந்திய கிராமங்களில் உள்ள மக்கள் பொது வெளியில் தங்கள் காலைக் கடன்களைக் கழிக்கும் நிலை காணப்பட்டது. இதனால் கழிப்பறைகள் கட்டுவது முக்கியமான ஒன்றாக இருந்தது.

“தூய்மை இந்தியா திட்டம்” – கழிப்பறைகள் கட்டியதில் மோசடியா?


இதனைத் தொடா்ந்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களைக் கழிப்பறைகள் கட்டும் பணியில் இணைத்துக் கொண்டது.இலக்கு நிர்ணயித்தது போலவே, கடந்த ஆண்டு அக்டோபா் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று இந்தியா முற்றிலுமாக பொது வெளியில் மலம் கழிப்பதிலிருந்து விடுதலை பெற்றுவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இதில் மத்திய அரசின் 53 பொதுத் துறை நிறுவனங்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 1.40 லட்சம் கழிப்பறைகளை பள்ளிக்கூடங்களில் கட்டியிருக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் பணியை சரிவரச் செய்யவில்லை என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரிகள் இத்தகைய கழிவறைகள் குறித்து ஆய்வு செய்து ஒரு அறிக்கை வெளிட்யிட்டுள்ளனர். அந்த ஆய்வின்படி, பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்திருக்கின்றன.

“தூய்மை இந்தியா திட்டம்” – கழிப்பறைகள் கட்டியதில் மோசடியா?


பொதுத்துறை நிறுவனங்கள் கட்டப்பட்டதாகக் கூறப்படும் கழிப்பறைகளில், 11 சதவீதக் கழிப்பறைகள் கோப்புகளில்தான் காணப்படுகின்றனவே தவிர, பள்ளிகளில் காணவில்லை. 30 சதவீதக் கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படாததாலும், சிதிலமடைந்திருப்பதாலும், தண்ணீா் வசதி இல்லாததாலும் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கின்றன. பல கழிப்பறைகள் பூட்டப்பட்டிருக்கின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது.பொதுக்

“தூய்மை இந்தியா திட்டம்” – கழிப்பறைகள் கட்டியதில் மோசடியா?

கழிப்பறைகளிலும் ஏறத்தாழ 25 சதவீதம் கழிப்பறைகள் பயன்படுத்த முடியாதவையாக மாறியுள்ளதும் தெரிய வந்துள்ளது. இது குறித்து தொடர்ந்து மேல் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
‘டாப் தமிழ் நியூஸ்’ செய்திகளுக்காக.. இர. சுபாஸ் சந்திர போஸ்.