தேசியக் கொடியை அவமரியாதை செய்த விவகாரம்… எஸ்.வி.சேகரின் மன்னிப்பு ஏற்பு!

தேசியக் கொடியை அவமரியாதை செய்த விவகாரம்… எஸ்.வி.சேகரின் மன்னிப்பு ஏற்பு!

தேசியக் கொடியை அவமரியாதை செய்த விவகாரத்தில் எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்துத் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொள்வதாக சென்னை பெருநகர போலீஸ் அறிவித்துள்ளது.
இந்திய தேசிய கொடியில் உள்ள நிறங்கள் மதத்தைக் குறிக்கிறது என்ற வகையில் எஸ்.வி.சேகர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. முதல்வர்

தேசியக் கொடியை அவமரியாதை செய்த விவகாரம்… எஸ்.வி.சேகரின் மன்னிப்பு ஏற்பு!

எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து போகிற போக்கில் தேசிய கொடி பற்றி எஸ்.வி.சேகர் பேசியிருந்தார். முதல்வரை அவதூறாகப் பேசிய விவகாரம் மறைந்து தேசியக் கொடி விவகாரம் மட்டும் பெரிதுபடுத்தப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், எஸ்.வி.சேகர் மன்னிப்புக் கேட்டால் கைது செய்ய மாட்டோம் என்று நீதிமன்றத்தில் சென்னை பெருநகர காவல் துறை கூறியது. அதை ஏற்று வருத்தம் தெரிவித்து

தேசியக் கொடியை அவமரியாதை செய்த விவகாரம்… எஸ்.வி.சேகரின் மன்னிப்பு ஏற்பு!

மன்னிப்புகோரி எஸ்.வி.சேகர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை பெருநகர போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், “தேசியக் கொடியை அவமதித்தது தொடர்பான முன்ஜாமீன் வழக்கில் வருத்தம் தெரிவித்து

தேசியக் கொடியை அவமரியாதை செய்த விவகாரம்… எஸ்.வி.சேகரின் மன்னிப்பு ஏற்பு!

எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொள்கிறோம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் வழக்கை வருகிற 14ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். மேலும் அதுவரை அவரை கைது செய்யக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.