உங்க வீட்டிலும் தாமரை மலரும்…. அபிஷேக் பானர்ஜிக்கு சவால் விடுத்த சுவேந்து ஆதிகாரி

 

உங்க வீட்டிலும் தாமரை மலரும்…. அபிஷேக் பானர்ஜிக்கு சவால் விடுத்த சுவேந்து ஆதிகாரி

பிப்ரவரி மாதத்துக்குள், உங்க வீட்டிலும் தாமரை மலரும் என்று மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜியிடம் பா.ஜ.க.வின் சுவேந்து ஆதிகாரி சவால் விடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்க நெருங்க பல்வேறு கட்சிகளை குறிப்பாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்கள், தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பா.ஜ.க. பக்கம் தாவி வருகின்றனர்.

உங்க வீட்டிலும் தாமரை மலரும்…. அபிஷேக் பானர்ஜிக்கு சவால் விடுத்த சுவேந்து ஆதிகாரி
சுவேந்து ஆதிகாரி

மம்தா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த சுவேந்த ஆதிகாரி கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார். தற்போது சுவேந்து ஆதிகாரி பாரம்பரிய பா.ஜ.க. தொண்டர்களே தோற்று விடும் அளவுக்கு தீவிரமாக திரிணாமுல் காங்கிரசையும், மம்தா பானர்ஜியையும் விமர்சனம் செய்து வருகிறார். பாக்வான்பூரில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சுவேந்து ஆதிகாரி கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜிக்கு சுவேந்து ஆதிகாரி பகிரங்கமாக சவால் விடுத்தார்.

உங்க வீட்டிலும் தாமரை மலரும்…. அபிஷேக் பானர்ஜிக்கு சவால் விடுத்த சுவேந்து ஆதிகாரி
அபிஷேக் பானர்ஜி

அந்த கூட்டத்தில் சுவேந்து ஆதிகாரி பேசுகையில் கூறியதாவது: என் வீட்டில் தாமரை மலரும் என்று பாபுசோனாவிடம் (அபிஷேக் பானர்ஜி) சொன்னேன். சவுமேந்து (சுவேந்து ஆதிகாரியின் சகோதரர்) பா.ஜ.க.வில் இணைந்தார். கவலைபடாதீங்க பாபுசோனா, பிப்ரவரிக்குள் உங்கள் வீட்டிலும் தாமரை மலர செய்வேன். ஏப்ரலில் ராம நவமிக்குள் எல்லா இடத்திலும் தாமரை மலரும். கோவிட்-19ஆல் நாடு முழுவதும் இறந்த மருத்துவர்களில் 18 சதவீதம் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள். தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களுக்கு கொடுப்பதற்கு பதிலாக மருத்துவர்களுக்கு மழை கோட்டை கொடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கொன்று விட்டது. இந்த அரசு 5.5 லட்சம் நிரந்த பணியிடங்களை நீக்கி விட்டது. அதேவேளையில் மேற்படிப்பு படித்த கணக்கில்லா இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.