மிட்னாபூர் மண்ணின் மைந்தனை விரும்பும்.. உங்களை களத்தில் சந்திப்போம்.. மம்தாவுக்கு சவால் விடுத்த சுவேந்து ஆதிகாரி

மிட்னாபூர் மண்ணின் மைந்தனை விரும்பும்.. உங்களை களத்தில் சந்திப்போம்.. மம்தாவுக்கு சவால் விடுத்த சுவேந்து ஆதிகாரி

மிட்னாபூர் மண்ணின் மைந்தனை விரும்பும், நாங்கள் உங்களை களத்தில் சந்திப்போம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு சுவேந்து ஆதிகாரி சவால் விடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் இம்மாதம் 27ம் தேதி தொடங்கி மொத்தம் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கடந்த வெள்ளிக்கிழமையன்று 291 சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

மிட்னாபூர் மண்ணின் மைந்தனை விரும்பும்.. உங்களை களத்தில் சந்திப்போம்.. மம்தாவுக்கு சவால் விடுத்த சுவேந்து ஆதிகாரி
சுவேந்து ஆதிகாரி (கையில் தாமரை வைத்திருப்பவர்)

அதேசமயம் பா.ஜ.க., நந்திகிராம் தொகுதியில் செல்வாக்குமிக்க தலைவரும், திரிணாமுல் காங்கிரசிலிருந்து பா.ஜ.க.வில் இணைந்த சுவேந்து ஆதிகாரியை களம் இறக்கியுள்ளது. சுவேந்து ஆதிகாரியை அவரது கோட்டையில் வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால் சுவேந்து ஆதிகாரியை அவ்வளவு எளிதாக மம்தாவால் தோற்கடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

மிட்னாபூர் மண்ணின் மைந்தனை விரும்பும்.. உங்களை களத்தில் சந்திப்போம்.. மம்தாவுக்கு சவால் விடுத்த சுவேந்து ஆதிகாரி
பா.ஜ.க.

இந்த சூழ்நிலையில் நந்திகிராமில் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜிக்கு சுவேந்து ஆதிகாரி சவால் விடுத்துள்ளார். மிட்னாபூரில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட சுவேந்து ஆதிகாரி பேசுகையில், வேட்பாளர்கள் பட்டியலின்படி மரியாதைக்குரிய முதல்வர் (மம்தா பானர்ஜி) நந்திகிராமில் தொகுதியில் போட்டியிடுகிறார். மிகவும் நல்லது. நாங்கள் அதை வரவேற்கிறோம். நாங்கள் மிட்னாபூர் மைந்தனை விரும்புகிறோம், வெளியாட்களை அல்லை. நாங்கள் உங்களை களத்தில் சந்திப்போம். மே 2ம் தேதியன்று நீங்கள் (மம்தா) தோற்று வெளியேறுவீர்கள் என்று தெரிவித்தார்.