திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்கம் காஷ்மீராக மாறிவிடும்.. சுவேந்து ஆதிகாரி எச்சரிக்கை

திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்கம் காஷ்மீராக மாறிவிடும்.. சுவேந்து ஆதிகாரி எச்சரிக்கை

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலம் காஷ்மீராக மாறி விடும் என்ற பா.ஜ.க.வின் சுவேந்து ஆதிகாரி எச்சரிக்கை செய்தார்.

கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுவதற்கு முன்னதாக, நந்திகிராம் சட்டப்பேரவை தொகுதியின் வேட்பாளர் சுவேந்து ஆதிகாரி பேசினார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: திரிணாமுல் காங்கிரசும், காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணியும் திருப்திப்படுத்தும் அரசியல் மூலம் மேற்குவங்கத்த பிரிக்க விரும்புகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்கம் காஷ்மீராக மாறிவிடும்.. சுவேந்து ஆதிகாரி எச்சரிக்கை
சுவேந்து ஆதிகாரி

திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்கம் காஷ்மீராக மாறிவிடும். காஷ்மீரின் பண்டிட்களுக்கு என்ன நிகழ்ந்ததோ அதுதான் உங்களுக்கும் நிகழும். உங்களை யாரும் சொந்த மகளாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஊடுருவல்காரர்கள் மற்றும் ரோஹிங்கியாக்களின் அத்தை நீங்கள். தனியர் நிறுவனமான திரிணாமுல் காங்கிரசின் தலைவர் மம்தா பானர்ஜி. ஊழல் மருமகன் (அபிஷேக் பானர்ஜி) அதன் நிர்வாக இயக்குனர்.

திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்கம் காஷ்மீராக மாறிவிடும்.. சுவேந்து ஆதிகாரி எச்சரிக்கை
மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி ரூ.500 கோடிக்கு ஆலோசகரை (பிரசாந்த் கிஷோர்) வாங்கியுள்ளார். மகாத்மா காந்தி ஊரகவேலைவாய்ப்பு திட்டம், பிரதமர் ஆவாஸ் திட்டம், நிலக்கரி, பசு மற்றும் மண் கடத்தல் ஆகியவற்றில் வாயிலாக இந்த பணம் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அண்மையில், நந்திகிராம் தொகுதியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன், தவறினால் அரசியலை விட்டே விலகி விடுகிறேன் சுவேந்து ஆதிகாரி சவால் விட்டது குறிப்பிடத்தக்கது.