மம்தாவை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கவில்லை என்றால் அரசியலிருந்து விலகி விடுகிறேன்.. சுவேந்து சவால்

மம்தாவை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கவில்லை என்றால் அரசியலிருந்து விலகி விடுகிறேன்.. சுவேந்து சவால்

மேற்கு வங்கத்தில் நந்திகிராம் சட்டப்பேரவை தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கவில்லை என்றால் அரசியலிருந்து விலகி விடுகிறேன் என்று பா.ஜ.க.வின் ஐக்கியமான சுவேந்து ஆதிகாரி சவால் விடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் அம்மாநில அரசியல் களம் மிகவும் பரபரப்பாக இருக்கிறது. நேற்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்தார்.

மம்தாவை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கவில்லை என்றால் அரசியலிருந்து விலகி விடுகிறேன்.. சுவேந்து சவால்
மம்தா பானர்ஜி, பா.ஜ.க.

திரிணாமுல் காங்கிரசிலிருந்து பா.ஜ.க.வுக்கு மாறிய சுவேந்து ஆதிகாரியின் சொந்த தொகுதி நந்திகிராம். அந்த தொகுதியில் போட்டியிட போவதாக மம்தா அறிவித்தது சுவேந்து ஆதிகாரிக்கு நேரடியாக சவால் விடுத்தது போல் இருந்தது. மம்தா நந்திகிராம் தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்த சில மணி நேரங்களில் சுவேந்து அதிகாரி மம்தாவை தோற்கடிக்கவில்லை என்றால் அரசியலிருந்து விலகி விடுகிறேன் என்று பதில் சவால் விடுத்தார்.

மம்தாவை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கவில்லை என்றால் அரசியலிருந்து விலகி விடுகிறேன்.. சுவேந்து சவால்
திலிப் கோஷ்

சுவேந்து ஆதிகாரி இது தொடர்பாக கூறுகையில், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை குறைந்தபட்சம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கவில்லை என்றால் நான் அரசியலிருந்து விலகி விடுகிறேன் என்று தெரிவித்தார். மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் திலிப் கோஷ் கூறுகையில், பவானிபூரில் வெற்றி பெறுவோம் என்று மம்தாவுக்கு நம்பிக்கை இல்லை. எனவே நந்திகிராம் மண்ணை சோதித்து வருகிறார். திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் பாதுகாப்பான தொகுதிகளை தேடுகிறார்கள். அவர்கள் எதையும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.