மாநிலத்தில் நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன்… சுவேந்து ஆதிகாரி உறுதி

 

மாநிலத்தில் நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன்… சுவேந்து ஆதிகாரி உறுதி

மாநிலத்தில் நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுவேந்து ஆதிகாரி தெரிவித்தார்.

நந்திகிராம் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுவேந்து ஆதிகாரி நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க.வின் சட்டமன்ற தலைவராக (சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர்) சுவேந்து ஆதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு சுவேந்து ஆதிகாரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மாநில மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய பணியாற்றுவேன்.

மாநிலத்தில் நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன்… சுவேந்து ஆதிகாரி உறுதி
மம்தா பானர்ஜி

மம்தா அரசாங்கத்தின் நேர்மறையான முயற்சிகளுக்கு நான் உதவுவேன். ஆனால் மாநிலத்தில் நடந்து கொண்டு இருக்கும் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன். சிதல்குச்சி துப்பாக்கிச்சூடு சம்பவம் சி.ஐ.டி.யின் எல்லைக்குள் வருகிறது. ஏனெனில் சிஆர்பிஎப் மற்றும் சிஐஎஸ்எப் மத்திய உள்துறை அமைச்சசகத்தின் கீழ் வருகிறது. மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவற்றின் உத்தரவின் பேரில் சிஐடி அதை செய்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாநிலத்தில் நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன்… சுவேந்து ஆதிகாரி உறுதி
திரிணாமுல் காங்கிரஸ்

மேற்கு வங்கத்தில் அண்மையில் அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடந்து முடிந்தது. 4ம் கட்ட தேர்தல் நடைபெற்ற கடந்த ஏப்ரல் 10ம் தேதியன்று கூச் பெஹார் மாவட்டம் சிதால்குச்சி வாக்குச் சாவடியில் வன்முறை சம்பவம் நடந்தது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய காவல் படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சிலர் இருந்தனர். அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் என கூறப்படுகிறது. தற்போது இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிஆர்பிஎப் மற்றும் சிஐஎஸ்எப் பிரிவுக்கு சி.ஐ.டி. சம்மன் அனுப்பியது.