மேற்கு வங்கத்தில் தாமரை மலர்ந்த பிறகே உறங்க செல்வேன்….. சுவேந்து ஆதிகாரி உறுதி

 

மேற்கு வங்கத்தில் தாமரை மலர்ந்த பிறகே உறங்க செல்வேன்….. சுவேந்து ஆதிகாரி உறுதி

மேற்கு வங்கத்தில் தாமரை மலர்ந்த (பா.ஜ.க. ஆட்சி) பிறகே உறங்க செல்வேன் என்று அண்மையில் பா.ஜ.க.வில் இணைந்த சுவேந்து ஆதிகாரி உறுதியாக தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் சுவேந்த ஆதிகாரி. மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவரான சுவேந்து ஆதிகாரி கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதலில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து தனது எம்.எல்.ஏ. பதவி மற்றும் கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அண்மையில் திரிணாமுல் காங்கிரசிலிருந்து விலகி அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.

மேற்கு வங்கத்தில் தாமரை மலர்ந்த பிறகே உறங்க செல்வேன்….. சுவேந்து ஆதிகாரி உறுதி
பா.ஜ.க.

சுவேந்த ஆதிகாரி வெளியேறியது திரிணாமுல் காங்கிரசுக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சுவேந்து ஆதிகாரி தனது பலம் மற்றும் செல்வாக்கை காட்டும் வகையில் கிழக்கு மிட்னாபூர் காந்தி மாவட்டம் காந்தியில் மெசேடா பைபாஸிலிருந்து சென்ட்ரல் பஸ் நிலையம் வரை பெரிய பேரணியை நடத்தினார். அதனை தொடர்ந்து கண்டையில் நடைபெற்ற பா.ஜ.க.வின் பொதுக்கூட்டத்தில் சுவேந்து ஆதிகாரி கலந்து கொண்டார்.

மேற்கு வங்கத்தில் தாமரை மலர்ந்த பிறகே உறங்க செல்வேன்….. சுவேந்து ஆதிகாரி உறுதி
திலீப் கோஷ்

அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: கோபிபாலாபூர் திலீப் கோசும், காந்தியின் சுவேந்து ஆதிகாரியும் ஒன்றாக வந்துள்ளோம். நீங்கள் (திரிணாமுல் காங்கிரஸ் அரசு) செல்ல வேண்டும். தாமரை மலர்ந்த பிறகு (பா.ஜ.க. ஆட்சி) மட்டுமே உறங்க செல்வேன். இது வெறும் புயல்தான். அடுத்த ஆண்டு தேர்தல் தொடங்கும்போது சுனாமி வரும். திரிணாமுல் காங்கிரஸ் அரசை பிடுங்கி எறிய பெங்காலின் பொதுமக்கள் தயாராகி விட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.