தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம்: தேமுதிக மாநில செயலாளர் சுதீஷ்

 

தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம்: தேமுதிக மாநில செயலாளர் சுதீஷ்

கொரோனோ வைரஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆம்பூர் தேமுதிக நகர செயலாளர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய தேமுதிக மாநில செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆறுதல் கூறினார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர தேமுதிக செயலாளராக இருந்தவர் வெங்கடேசன். இவர் கடந்த 14.11.2020 ஆம் தேதி கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு தேமுதிக மாநில செயலாளர் எல்.கே.சதீஷ் 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை வழங்கி ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம்: தேமுதிக மாநில செயலாளர் சுதீஷ்

தொடர்ந்து ஆம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக மாநில செயலாளர் எல்.கே.சதீஷ், “தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனவரி மாதம் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடி தொண்டர்களின் கருத்துகளை கேட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்” எனக் கூறினார்.