நமது முதல்வர் விஜயகாந்த்! சுதீஷின் அதிரடி முகநூல் பதிவு

 

நமது முதல்வர் விஜயகாந்த்! சுதீஷின் அதிரடி முகநூல் பதிவு

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவிருக்கும் சூழலில் முன்னணி கட்சிகளான திமுகவும், அதிமுகவும் தேர்தல் கூட்டணியும், தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதிமுக, தன்னுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாமகவுக்கு தான் அதிக பட்ச தொகுதிகளை கொடுத்திருக்கிறது. பாமகவுக்கு 23 தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், பாஜகவுக்கு 22 தொகுதிகள் கொடுக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் தங்களுக்கு பாமகவை விட அதிக தொகுதிகள் வேண்டும் என்றும், 30 தொகுதிகள் வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்திவருகிறது. இதேபோல் தேமுதிகவும் தங்களுக்கு குறைந்தது 25 தொகுதிகள் வேண்டுமென சொல்லிவருகிறது. ஆனால் அதிமுகவோ தேமுதிகவுக்கு அதிகபட்சமாக 12 முதல் 14 இடங்களை கொடுக்க முடிவு செய்துள்ளது. இதனை ஏற்க மறுத்து கூட்டணி பேச்சுவார்த்தையில் தவிர்த்து தனது எதிர்ப்பை பதிவு செய்தது திமுக.

நமது முதல்வர் விஜயகாந்த்! சுதீஷின் அதிரடி முகநூல் பதிவு

இந்த சூழலில் தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை வெளிட்டுள்ளார். அதில், அதிமுக-தேமுதிக கூட்டணியின் தொகுதி பங்கீடு இழுப்பறியான நிலையில், நமது முதல்வர் என விஜயகாந்த் புகைப்படத்தையும், நமது கொடி என தேமுதிக கொடியையும், நமது சின்னம் என முரசு சின்னத்தையும் அடங்கிய ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். இதிலிருந்து தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவது உறுதியாகியுள்ளது. அதிமுகவும் தேமுதிகவை கழட்டிவிடவே தொகுதிகளை குறைத்து இழுப்பறியில் ஈடுபட்டுவந்தது.