சன் டிவி மீது பாஜகவுக்கு வந்த சந்தேகம்

 

சன் டிவி மீது பாஜகவுக்கு வந்த சந்தேகம்

கொஞ்ச நாட்களாகவே சீனர்களையும். சீனாவை பற்றிய செய்தியினையும் அதிகம் வெளியிடுகிறது சன் டிவி. திமுக சீன நிகழ்ச்சியில் பங்கேற்கிறது, அது சார்பு ஊடகம் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது சந்தேகத்தை வரவழைக்கிறது. விசாரிக்க வேண்டும் என்கிறார் தமிழக பாஜகவின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.

சன் டிவி மீது பாஜகவுக்கு வந்த சந்தேகம்

அவர் மேலும், நக்சல், பிரிவினைவாதம், தீவிரவாதம் போன்றவற்றை ஆதரிப்பவர்களை அருகில் வைத்து கொண்டு விடியல், வளர்ச்சி என்றால் யாரும் நம்ப மாட்டார்கள் என்கிறார்.

சன் டிவி மீது பாஜகவுக்கு வந்த சந்தேகம்

“ஆண்டிப்பட்டி கனவாக் காத்து ஆள தூக்குதே..” – திருமண விழாவில் தமிழர்களுக்காக பாட்டு பாடி அசத்திய சீனர் என்று சன் நியூஸ் தொலைக்காட்சியில் வெளிவந்த செய்திக்காகத்தான் எஸ்.ஆர்.சேகர் இந்த சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்.

சன் டிவி மீது பாஜகவுக்கு வந்த சந்தேகம்

இணையங்களில் வைரலாகும் அந்த வீடியோவை நடிகை ஐஸ்வர்யார் ராஜேஷ் தனது வலைதளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். தர்மதுரை படத்தில் அந்த பாடலுக்கு நடனம் ஆடி/நடித்திருந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.