பீகாரில் எந்த கட்சியாலும் தனியாக ஆட்சி அமைக்க முடியாது… கூட்டணியால் மட்டுமே முடியும்…. பா.ஜ.க.

 

பீகாரில் எந்த கட்சியாலும் தனியாக ஆட்சி அமைக்க முடியாது… கூட்டணியால் மட்டுமே முடியும்…. பா.ஜ.க.

பீகாரில் எந்தவொரு தனி கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது. கூட்டணியால் மட்டுமே முடியும் என சுஷில் மோடி தெரிவித்தார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான தற்போதைய அரசின் ஆட்சி காலம் நவம்பர் 29ம் தேதி முடிவடைய உள்ளது. அம்மாநிலத்தில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர்-நவம்பரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஜனசக்தி கட்சி ஆகிய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுகின்றன. மறுபுறம் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையில் காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் அடங்கிய மகாபந்தன் கூட்டணி தேர்தலை போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீகாரில் எந்த கட்சியாலும் தனியாக ஆட்சி அமைக்க முடியாது… கூட்டணியால் மட்டுமே முடியும்…. பா.ஜ.க.
பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி

பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், அம்மாநில துணை முதல்வருமான சுஷில் மோடி தேர்தல் தொடர்பாக கூறுகையில், பா.ஜ.க. ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை பீகார் அரசியலின் முக்கிய முக்கோண சக்திகளாகும். கூட்டணி என்பது மாநிலத்தின் உண்மை. இது குறித்து எந்தவிதமான தவறான எண்ணமும் இருக்கக்கூடாது. இன்று எந்த அரசியல் கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் சொந்தமாக அரசாங்கத்தை அமைக்கும் சூழ்நிலையில் இல்லை.

பீகாரில் எந்த கட்சியாலும் தனியாக ஆட்சி அமைக்க முடியாது… கூட்டணியால் மட்டுமே முடியும்…. பா.ஜ.க.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மகாபந்தன் கூட்டணி எந்த இடத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போட்டியில்லை. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி, ராஷ்டிரிய ஜனதா தளம் முகாமுக்கு எதிராக ஆட்சியை அமைக்கும். பா.ஜ.க.வுக்கு தனது பலம் குறித்து தவறான புரிதல் இல்லை. நாங்கள் வலுவாக இருக்கிறோம், எங்களுக்கு ஒரு அமைப்பு உள்ளது. ஆனால் ஒன்றாக இணைந்து போட்டியிடும்போதுதான் வெற்றி பெறுவோம். பா.ஜ.க.வின் மத்திய தலைமையும் இது குறித்து எந்தவித மாயையிலும் இல்லை. அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் ஒற்றுமையாக போட்டியிட்டு வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.