நிதிஷ் குமார்தான் முதல்வர் அதில் எந்த குழப்பமும் இல்லை… சொன்ன சொல்லை காப்பாற்றிய பா.ஜ.க.

 

நிதிஷ் குமார்தான் முதல்வர் அதில் எந்த குழப்பமும் இல்லை… சொன்ன சொல்லை காப்பாற்றிய பா.ஜ.க.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார்தான் அதில் எந்த குழப்பமும் இல்லை என்று அம்மாநிலத்தின் துணை முதல்வரும், பா.ஜ.க. தலைவருமான சுஷில் மோடி தெரிவித்தார்.

அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. ஆகிய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. அம்மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது, தங்களை காட்டிலும் ஐக்கிய ஜனதா தளம் குறைந்த இடங்களில் வென்றாலும் நிதிஷ் குமார்தான் முதல்வர் என்று பா.ஜ.க. உறுதியாக தெரிவித்தது.

நிதிஷ் குமார்தான் முதல்வர் அதில் எந்த குழப்பமும் இல்லை… சொன்ன சொல்லை காப்பாற்றிய பா.ஜ.க.
பா.ஜ.க.

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்து கொண்டது. 110 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க. 74 இடங்களில் வென்றது. அதேசமயம் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 115 இடங்களில் போட்டியிட்டு 43 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. கூட்டணி கட்சிகள் 8 இடங்களில் வென்றது. ஐக்கிய ஜனதா தளத்தை காட்டிலும் அதிக இடங்களை வென்றததால் பா.ஜ.க. தனது நிலைப்பாட்டிலிருந்து மாறுமோ என்ற கேள்வி எழுந்தது. ஆனால் நிதிஷ் குமார்தான் முதல்வர் அவரை மாற்றும் கேள்விக்கே இடமில்லை என்று பா.ஜ.க. உறுதியாக தெரிவித்துள்ளது.

நிதிஷ் குமார்தான் முதல்வர் அதில் எந்த குழப்பமும் இல்லை… சொன்ன சொல்லை காப்பாற்றிய பா.ஜ.க.
சுஷில் மோடி

பீகார் துணை முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷில் மோடி இது குறித்து கூறுகையில், நிதிஷ் குமார்தான் பீகார் முதல்வராக இருப்பார். அவரை மாற்றும் கேள்விக்கே இடமில்லை. பீகார் முதல்வராக நிதிஷ் குமார் என்ற விவகாரத்தில் எந்தவித குழப்பமும் இல்லை. தேர்தலுக்கு முன்பு இந்த முடிவு எடுக்கப்பட்டது, அது அப்படியே இருக்கும். கூட்டணியில் சில நேரங்களில் ஒரு கூட்டாளி அதிக இடங்களை வெல்லலாம், மற்றொருவர் குறைந்த இடங்களை பெறலாம். ஆனால் நாங்கள் அனைவரும் சமமான கூட்டாளிகள். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தார்கள் என்று தெரிவித்தார்.