பீகார் மாநிலங்களவை எம்.பி. இடைத்தேர்தல் தேர்தல்.. சுஷில் குமார் மோடி இன்று வேட்பு மனு தாக்கல்…

பீகார் மாநிலங்களவை எம்.பி. இடைத்தேர்தல் தேர்தல்.. சுஷில் குமார் மோடி இன்று வேட்பு மனு தாக்கல்…

பீகாரில் காலியாக இருக்கும் மாநிலங்களை எம்.பி. பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வின் சுஷில் குமார் மோடி இன்று வேட்பு தாக்கல் செய்துள்ளார்.

லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பஸ்வான் மறைவால் அவர் வகித்த மாநிலங்களவை எம்.பி. பதவி காலியாக இருக்கிறது. இதற்கான இடைத்தேர்தல் வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பீகார் பா.ஜ.க. வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடியை அந்த கட்சி களம் இறக்கியுள்ளது.

பீகார் மாநிலங்களவை எம்.பி. இடைத்தேர்தல் தேர்தல்.. சுஷில் குமார் மோடி இன்று வேட்பு மனு தாக்கல்…
ராம் விலாஸ் பஸ்வான்

சுஷில் குமார் மோடி இன்று மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இது தொடர்பாக பா.ஜ.க. தலைமை விடுத்து அறிக்கையில், பீகாரின் அனைத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் கட்சி தலைவர்கள் அனைவரும் மாநில கட்சி அலுவலகத்தில் 11.30 மணிக்கு ஆஜராக வேண்டும். பின் தேர்தல் கமிஷனர் அலுவலகத்தில் 12.15 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக சுஷில் குமார் மோடியுடன் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

பீகார் மாநிலங்களவை எம்.பி. இடைத்தேர்தல் தேர்தல்.. சுஷில் குமார் மோடி இன்று வேட்பு மனு தாக்கல்…
சிராக் பஸ்வான்

இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு, மாநிலங்களவை இடைத்தேர்தலில் சுஷில் குமார் மோடிக்கு எதிராக மறைந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மனைவியை (சிராக் பஸ்வானின் தாயார்) நிறுத்தினால் லோக் ஜனசக்தி கட்சிக்கு ஆதரவு அளிக்க தயார் என்று அதன் தலைவர் சிராக் பஸ்வானிடம் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி ஆசை காட்டியது. ஆனால் சிராக் பஸ்வான் இதுவரை அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.