நிதிஷ் அரசை கவிழ்க்க தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்களுக்கு வலை வீசிய லாலு… சுஷில் குமார் பகீர் தகவல்

நிதிஷ் அரசை கவிழ்க்க தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்களுக்கு வலை வீசிய லாலு… சுஷில் குமார் பகீர் தகவல்

பீகாரில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர் நிதிஷ் குமார் அரசை கவிழ்க்க, சிறையில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்களுக்கு வலை வீசியதாக பா.ஜ.க.வின் சுஷில் குமார் மோடி பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்தது. நிதிஷ் குமார் தொடர்ந்து 4வது முறையாக முதல்வராக பதவியேற்றார். பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான புதிய அரசு பதவியேற்று 10 நாட்களே ஆன நிலையில், அந்த அரசை ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் நிறுவனரும், தற்போது ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் கைதியாக இருக்கும் லாலு பிரசசாத் யாதவ் கவிழ்க்க முயற்சி மேற்கொண்டதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

நிதிஷ் அரசை கவிழ்க்க தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்களுக்கு வலை வீசிய லாலு… சுஷில் குமார் பகீர் தகவல்
சுஷில் குமார் மோடி

பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி இது தொடர்பாக டிவிட்டரில், ராஞ்சியிலிருந்து லாலு பிரசாத் யாதவ் செல்போனிலிருந்து (8051216302) தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அமைச்சர் பதவி கொடுப்பதாகவும் வாக்குறுதியும் கொடுத்துள்ளார். நான் அந்த எண்ணுக்கு அழைத்தபோது லாலு எடுத்தார், ஜெயிலிருந்து இந்த மாதிரி மோசமான தந்திரங்களை செய்யாதீர்கள், நீங்கள் வெற்றிபெற முடியாது என்று நான் அவரிடம் தெரிவித்தேன் என்று பதிவு செய்து இருந்தார்.

நிதிஷ் அரசை கவிழ்க்க தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்களுக்கு வலை வீசிய லாலு… சுஷில் குமார் பகீர் தகவல்
நிதிஷ் குமார்

பா.ஜ.க.வில் இருந்தால் முதல்வர் நிதிஷ் குமாருக்கு சுஷில் குமார் மோடி மிகவும் நெருங்கிய நண்பர். அண்மையில் முதல்வர் நிதிஷ் குமார், சுஷில் குமார் மோடியை பி.எல்.சி.-ன் தலைவராக நியமனம் செய்தது குறிப்பிடத்தக்கது. இது, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மேலவை உறுப்பினர்களின் நடத்தைகளை கண்காணிக்கும் முக்கிய கமிட்டியாகும்.