சுஷாந்த் சிங் மறைவு: “பிரகாசமான இளம் நடிகர் சீக்கிரத்தில் நம்மை விட்டு சென்று விட்டார்” – பிரதமர் மோடி இரங்கல்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

டெல்லி: பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இந்நிலையில் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வந்த இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த செய்தியை அவரின் வீட்டு பணிப்பெண் போலீசில் தெரிவித்ததாக தெரிகிறது. எனினும், தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த செய்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், சுஷாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் “சுஷாந்த் சிங் ராஜ்புத்…ஒரு பிரகாசமான இளம் நடிகர் மிக விரைவில் நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார். டிவியிலும், திரைப்படங்களிலும் அவர் சிறந்து விளங்கினார். பொழுதுபோக்கு உலகில் அவரது உயர்வு பலருக்கு உத்வேகம் அளித்தது. பல மறக்க முடியாத ஃபெர்பார்ம்களை அவர் விட்டுச் சென்றுள்ளார். அவர் காலமான செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி” என்று கூறியுள்ளார்.

Most Popular

கிருஷ்ணர் இன்று ஜெயிலில் பிறந்தார், உங்களுக்கு பெயில் அல்லது ஜெயில் எது வேண்டும்? எஸ்.ஏ.பாப்டே நகை்சுவை

நீதிமன்றங்கள் எப்போதும் மிகவும் வழக்குகளால் மிகவும் சீரியஸாக இருக்கும். அதேசமயம் சில நேரங்களில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறும். அதற்கு உதாரணமாக நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு சம்பவம் நடந்தது. கொலை வழக்கில்...

எனக்கு என்னவோ அவங்க 2 பேரும் மேலயும் சந்தேகம் இருக்கு… சச்சின், கெலாட் சேர்ந்தது குறித்து மாயாவதி

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக ராஜஸ்தான் அரசியல்...

பா.ஜ.க. அரசின் மோசடிகள் ஹரியானாவை திவால் நிலைக்கு தள்ளுகின்றன… காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஹரியானாவின் எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடா செய்தியாளர்கள் சந்திப்பின்போது, முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் ஊழல்கள் மாநிலத்தை திவால் நிலைக்கு தள்ளுவதாக குற்றம் சாட்டினார்....

போன மாசம் மட்டும் 12.81 லட்சம் பைக், ஸ்கூட்டர் காலி.. மீண்டும் சூடு பிடிக்க தொடங்கிய வாகன விற்பனை

லாக்டவுனால் முடங்கி கிடந்த வாகன விற்பனை தற்போது மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சுத்தமாக வாகன விற்பனை நடக்கவில்லை. மே மாதத்தில் வாகன விற்பனை சிறிது நடைபெற்றது. ஜூன்...
Do NOT follow this link or you will be banned from the site!