‘அடுத்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் அமரும்’ : பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை

‘அடுத்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் அமரும்’ :  பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை

அடுத்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் அமரும் என பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். அதில், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையை சட்டமாக கொண்டு வருகிறது.

‘அடுத்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் அமரும்’ :  பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை

ஏழை எளிய மக்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள் என்று ஆவேசமாக கூறியிருந்தார்.இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை பெயரில் ட்வீட் ஒன்று வெளியானது. பின்னர் அது போலியான கணக்கில் இருந்து பதிவு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

‘அடுத்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் அமரும்’ :  பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை

இந்நிலையில் தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை சென்னை முகப்பேரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சூர்யாவிற்கு எதிராக நான் பதிவிடுவது போல் கருத்து பதிவிட்ட போலிக் கணக்குகளை முடக்கிவிட்டோம். சூர்யா நல்ல நடிகர், நல்ல மனிதர். அவருக்கு கருத்து கூறும் உரிமை உள்ளது. இருப்பினும் அவருடைய கருத்து கடுமையாக இருந்தது. சூர்யாவின் கருத்து என்பது பலரையும் எளிதில் சென்று சேரும். ஆனால் அடுத்த ஆண்டு நீட் குறித்த சூர்யாவின் பார்வை மாறும்” என்றார்.

‘அடுத்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் அமரும்’ :  பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை

தொடர்ந்து பேசிய அவர், “அடுத்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் அமரும். தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக பாஜகவை மக்கள் பார்க்கின்றனர். 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக வலுவோடு காலுன்றி நிற்கக்கூடிய கட்சியாக இருக்கும். பாஜகவும் ரஜினியும் அரசியலில் ஒருமித்த கருத்து கொண்டுள்ளனர். எதிர்காலத்தில் ரஜினியுடனான கூட்டணி குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்” என்றும் தெரிவித்தார்.