தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்… உங்களின் ஏக்கம் இந்தாண்டு தீர போகிறது!

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்… உங்களின் ஏக்கம் இந்தாண்டு தீர போகிறது!

2019ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலிருந்தே பரவத் தொடங்கிய கொரோனா தொற்று 2020ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் உச்சம் பெற்றது. இதனால் தொழில் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டு பொருளாதாரமும் வீழ்ந்தது. 8 மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்ததால் தனியார் தொழில் நிறுவனங்கள் செயல்படாமலேயே இருந்தன. ஒருசில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வொர்க் பிரம் ஹோம் என்ற வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது.

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்… உங்களின் ஏக்கம் இந்தாண்டு தீர போகிறது!

இது ஒருபுறம் என்றால் கொரோனாவைக் காரணம் காட்டி சம்பள உயர்வு வழங்காமல் தவிர்த்து வந்தன. கொரோனா காலத்தில் கிடைத்திருக்கும் வேலையே நிலைக்குமா என்ற அச்சத்தில் இருந்ததால் ஊழியர்களும் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் இருந்தனர். நிறுவனங்களிடம் சம்பள உயர்வு கோரி அழுத்தம் கொடுக்கவில்லை. தற்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பி வருவதால் இந்த வருடமாவது சம்பள உயர்வு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் ஏராளமான ஊழியர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்… உங்களின் ஏக்கம் இந்தாண்டு தீர போகிறது!

அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியிருக்கிறது. ஜீனியஸ் கன்சல்டன்ட் நிறுவனம் நடத்திய ஆய்வின்படி நாடு முழுவதும் 59 சதவீத நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கொடுக்கலாம் என்று விருப்பம் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல 20 சதவீத நிறுவனங்கள் 5 சதவீதத்துக்கு குறைவான சம்பள உயர்வு வழங்கலாம் என்று முடிவு செய்துள்ளன. குறிப்பாக் 21 சதவீத நிறுவனங்கள் இந்த வருடமும் அதே சம்பளத்துடன் ஊழியர்களிடம் வேலை வாங்க முடிவு செய்திருக்கின்றன.

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்… உங்களின் ஏக்கம் இந்தாண்டு தீர போகிறது!

தொலைத் தொடர்பு, ஐடி, ஆட்டோமொபைல், பொறியியல், வங்கி மற்றும் நிதித் துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 1,200 நிறுவனங்களிடம் ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 43 சதவீதத்தினர் புதிய ஊழியர்களைப் பணியில் அமர்த்த முயற்சி செய்வதாகக் கூறியிருக்கிறார்கள். 41 சதவீதத்தினர் மாற்று ஊழியர்களை வேலைக்கு எடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். எனினும் 11 சதவீதத்தினர் யாரையும் புதிதாக வேலைக்குச் சேர்க்கும் நிலையில் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். அதன்படி தென்னகத்தைச் சேர்ந்த நிறுவனங்களில் 37% வேலைவாய்ப்புகளும், மேற்கு மாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்களில் 33% வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்… உங்களின் ஏக்கம் இந்தாண்டு தீர போகிறது!

புதியவர்கள் மற்றும் குறைவான அனுபவம் உள்ளவர்களைக் காட்டிலும் நடுத்தர அனுபவம் உள்ள ஊழியர்களைப் பணியில் அமர்த்த திட்டமிட்டிருப்பதாகக் கூறுகின்றனர். அதேபோல 51% பெண்களையும் 54% ஆண்களையும் பணியில் அமர்த்த விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். கொரோனாவால் வேலையிழந்த பலருக்கும் நம்பிக்கையளிக்கும் விதமாக ஆய்வு முடிவுகள் இருக்கின்றன. ஏற்கெனவே பணியில் இருக்கும் ஊழியர்களுக்கே சாதகமாக முடிவுகள் இருக்கின்றன.