கொரோனா 2வது அலை இருந்தபோதிலும், உலக தலைவர்களில் மோடிதான் பர்ஸ்ட்.. ஆய்வு நிறுவனம்

 

கொரோனா 2வது அலை இருந்தபோதிலும், உலக தலைவர்களில் மோடிதான் பர்ஸ்ட்.. ஆய்வு நிறுவனம்

கொரோனா வைரஸ் 2வது அலை இருந்தபோதிலும், உலக தலைவர்களில் இந்திய பிரதமர் மோடிதான் ஒப்புதல் மதிப்பீட்டில் முதல் இடத்தில் உள்ளார் என்று ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

சர்வதே கருத்து கணிப்பு ஏஜென்சியான மார்னிங் கன்சல்ட் அண்மையில் சர்வதேச அளவில் பிரபலமான தலைவர்கள் குறித்து கருத்து கணிப்பை மேற்கொண்டது. கருத்து கணிப்பில் பல ருசிகரமான தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த கருத்து கணிப்பின்படி, அமெரிக்க அதிபர் பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட சக உலக தலைவர்களை காட்டிலும் மிகவும் பிரபலமான உலக தலைவராக பிரதமர் மோடி விளங்குகிறார். வயதுக்கு வந்தவர்கள் மத்தியில் பிரதமர் மோடியின் செயல்பாட்டுக்கு பெரிய அளவில் ஒப்புதல் கிடைத்துள்ளது.

கொரோனா 2வது அலை இருந்தபோதிலும், உலக தலைவர்களில் மோடிதான் பர்ஸ்ட்.. ஆய்வு நிறுவனம்
உலக தலைவர்களின் ஒப்பதல் மதிப்பீடு தொடர்பான வரைபடம்

உலக தலைவைர்களில் அதிகபட்சமாக 66 சதவீத ஒப்புதல் மதிப்பீடுடன் பிரதமர் மோடி முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி உள்ளார். அவரது ஒப்புதல் மதிப்பீடு 65 சதவீதமாக உள்ளது. மெக்சிகன் ஜனாதிபதி லோபஸ் ஓப்ராடோரின் ஒப்புதல் மதிப்பீடு 63 சதவீதமாக உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார்.

கொரோனா 2வது அலை இருந்தபோதிலும், உலக தலைவர்களில் மோடிதான் பர்ஸ்ட்.. ஆய்வு நிறுவனம்
இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி

பிரதமர் மோடி கடந்த 7ம் தேதியன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிறகு அவரது ஒப்புதல் மதிப்பீடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அன்று பிரதமர் பேசுகையில், மத்திய அரசு உற்பத்தியாளர்களிடமிருந்து 75 சதவீத தடுப்பூசிகளை வாங்கி மாநில அரசுகளுக்கு வழங்கும். அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும். 2021 நவம்பர் வரை இலவச ரேஷன் தொடரும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.