பல் தொடங்கி ஆண்மை பிரச்னை வரை… கிராம்பின் அசத்தல் பலன்கள்!

 

பல் தொடங்கி ஆண்மை பிரச்னை வரை… கிராம்பின் அசத்தல் பலன்கள்!

கிராம்பு மரத்தின் மொக்குகளையே பறித்து உலர்த்தி கிராம்பு என்று விற்பனை செய்கின்றனர். இந்த மொக்குகள் மசாலா பொருளாகவும் மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிராம்பில் (தோராயமாக 2 கிராம்) கலோரி 6, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து தலா 1 கிராம், ஒரு நாள் தேவையில் 55 சதவிகிதம் அளவுக்கு மாங்கனீசு. 2 சதவிகிதம் அளவுக்கு வைட்டமின் கே உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.

பல் தொடங்கி ஆண்மை பிரச்னை வரை… கிராம்பின் அசத்தல் பலன்கள்!

ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது கிராம்பு என்றாலும், கிராம்பு என்றதும் நம் நினைவுக்கு வருவது அதன் பல் வலியை நீக்கும் தன்மைதான். கிராம்பு ஆன்டி பாக்டீரியலாகவும், வீக்கத்தைத் தடுக்கும் திறன் கொண்டதாகவும் உள்ளது. கிராம்பு சேர்க்கப்பட்ட பற்பசையைப் பயன்படுத்தும்போது அது பற்சிதைவு உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து காக்கிறது.

பல் வலி அதிகமாக இருக்கும்போது ஒரு கிராம்பை எடுத்து வலி உள்ள பற்களைக் கொண்டு கடித்து அப்படியே வைத்தால் வலி கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

கிராம்பில் eugenol என்ற இயற்கை ஆன்டி ஆக்சிடன்ட் உள்ளது. இது வைட்டமின் இ-யை விடவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு ஆக்சிடேட்டிவ் ஸ்டிரெஸ்ஸால் வரக்கூடிய பாதிப்புகளை சரி செய்கிறது. இதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படுகிறது.

கிராம்பில் உள்ள மூலக்கூறுகள் சில வகையான புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை 80 சதவிகிதம் அளவுக்கு குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. eugenol புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. அதற்காக அதிக அளவில் கிராம்பு எடுத்துக்கொள்ளவும் கூடாது. அதிகப்படியாக எடுத்துக்கொள்ளும்போது அது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

கிராம்பு பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதன் மூலம் ஈ-கோலை போன்ற பாக்டீரியா தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை கிராம்பு குறைக்கிறது.

தினமும் ஒன்று, இரண்டு கிராம்புகளை எடுத்து வந்தால் கல்லீரல் பாதிப்பு தவிர்க்கப்படும். கல்லீரலில் அதிகரிக்கும் கொழுப்பு பிரச்னையை போக்க கிராம்பு உதவுகிறது.

கிராம்பு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகிறது. கிராம்பில் காணப்படும் நுண் ஊட்டச்சத்துக்கள் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை செல்கள் பயன்படுத்தத் தூண்டுகிறது. இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

விந்து முந்துதல், விந்தணு நீர்த்துப்போதல் போன்ற பிரச்னை உள்ளவர்கள் தினமும் ஒரு கிராம்பை வாயில் ஒதுக்கி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் கிராம்பு எண்ணெய்யை ஆணுறுப்பு, விதைப் பை மீது தடவி மசாஜ் செய்து வந்தால் இந்த பிரச்னை நீங்கும் என்று இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர்.