’இங்கிலாந்து அணியின் ஆச்சர்ய வெற்றி’ சொதப்பிய ஆஸ்திரேலியா

 

’இங்கிலாந்து அணியின் ஆச்சர்ய வெற்றி’ சொதப்பிய ஆஸ்திரேலியா

எவருமே எதிர்பார்க்காத வகையில் இங்கிலாந்து ஆச்சர்ய வெற்றி பெற்றிருக்கிறது. சொதப்பிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் வெற்றியைக் கோட்டை விட்டது.

இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. டி20 போட்டிகள் மூன்றும், ஒருநாள் போட்டிகள் மூன்றும் ஆடுவதற்கான திட்டத்தில் உள்ளன.

’இங்கிலாந்து அணியின் ஆச்சர்ய வெற்றி’ சொதப்பிய ஆஸ்திரேலியா

முதலில் நடைபெற்ற டி20 தொடரில் முதல் 2 போட்டிகளை வென்று இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றியது. கடைசி மற்றும் மூன்றாம் போட்டியில் மட்டும் ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அசத்தலான வெற்றி பெற்றது. இதனால், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1:0 எனும் கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகித்தது. இரண்டாம் போட்டியையும் வென்றால் தொடரையும் கைப்பற்றிவிடலாம் என்ற எண்ணத்தோடு களத்தில் இறங்கியது ஆஸ்திரேலியா.

’இங்கிலாந்து அணியின் ஆச்சர்ய வெற்றி’ சொதப்பிய ஆஸ்திரேலியா

இரண்டாம் ஒருநாள் போட்டியில் டாஸ் வின் பண்ணிய இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் எடுத்துள்ளது. ஓப்பனிங் வீரர்களாக ஜாஸன் ராய் மற்றும் பர்ஸ்டோ இறங்கினார்கள். முதல் ஒருநாள் போட்டியில் விளாசிய பர்ஸ்டோ இன்று 7 பந்துகளைச் சந்தித்து ஒரு ரன்கூட எடுக்காமல் டக் அவுட்டாகி விட்டார்.

ஜோ ரூட் விக்கெட்டை காப்பாற்றிக்கொள்வதற்காக, டெஸ்ட் போட்டியைப் போல ஆடினார். 73 பந்துகளில் 39 ரன்கள் மட்டுமே எடுத்தார். இங்கிலாந்து டீமின் கேபடன் மோர்கன் 52 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அடுத்தடுத்த வீரர்களும் சிறப்பாக ஆடவில்லை. முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த சாம் பில்லிங்ஸ் 8ரன்களோடு நடையைக் கட்டினார்.

’இங்கிலாந்து அணியின் ஆச்சர்ய வெற்றி’ சொதப்பிய ஆஸ்திரேலியா

எதிர்பாராத வண்ணமாக இங்கிலாந்து அணியின் பவுலர்கள் பொறுப்பை உணர்ந்து ஆடினர். கிறிஸ் வோக்ஸ் 26 ரன்களையும் ரஷீத் 26 பந்துகளில் 35 ரன்களையும் எடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்தௌ 231 ரன்களை மட்டுமே எடுத்தது.

தொடரின் முக்கியான போட்டியில் இந்த ஸ்கோர் மிகக் குறைவு என்பது எல்லோருக்குமே தெரியும். அதனால், இங்கிலாந்து அணிக்கு தோல்வி நிச்சயம் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது.

’இங்கிலாந்து அணியின் ஆச்சர்ய வெற்றி’ சொதப்பிய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய பவுலிங் தரப்பில் ஆடம் ஸாம்பா 10 ஓவர்கள் வீசி, 36 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாட் கிம்மிஸ் வீசிய 10 ஓவர்களில் 3 மெய்டன் ஓவர்களும் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

 எளிதாகவே வெற்றிப்பெற்றுவிடலாம் என்று எண்ணத்தோடு பேட்டிங்கைத் தொடங்க டேவிட்  வார்னரும் கேப்டன் ஆரோன் பின்ச்வும் இறங்கினர். 6 ரன்களோடு வார்னரும் ஸ்டொய்ன்ஸ் 9 ரன்களோடு அவுட் ஆகினாலும் கேப்டன் ஆரோன் பின்ச் நிலைத்து ஆடினார்.

ஆனால், அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுக்கத்தான் சரியான பேட்ஸ்மேன் இல்லை. லபுஷேன் 48 ரன்கள் எடுத்தார். ஆனால், மிட்சேல் மார்ஸ் 1 ரன் மட்டுமே எடுத்தார்.

’இங்கிலாந்து அணியின் ஆச்சர்ய வெற்றி’ சொதப்பிய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் நிலையற்ற ஆட்டத்தால் எளிதாகக் கிடைக்க வேண்டிய வெற்றி, கிடைக்குமா… கிடைக்காதா என்ற நிலைக்குப் போனது.

அலெக்ஸ் கேரியின் ஆட்டம் கொஞ்சம் நம்பிக்கை தந்தது. 41 பந்துகளில் 36 ரன்களை எடுத்தார். அதற்கு பின்ச் 73 ரன்களோடு ஆட்டம் இழந்தார். பேட்ஸ்மேன்களே ஒழுங்காத ஆடாத நிலையில் பவுலர்களின் ஆட்டத்தைக் குறை  சொல்லமுடியாது. 48.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களை மட்டுமே ஆஸ்திரேலிய வீரர்களால் எடுக்க முடிந்தது. இதனால், பரிதாபமாக ஆஸ்திரேலியா வெற்றியைத் தாரை வார்த்தது.

’இங்கிலாந்து அணியின் ஆச்சர்ய வெற்றி’ சொதப்பிய ஆஸ்திரேலியா

இங்கிலாந்து பவுலிங் தரப்பில் கிறிஸ் வோக்ஸ் அற்புதமாக பந்து வீசினார். 10 ஓவர்கலில் 1 மெய்டன் ஓவரை வீசிய 32 ரன்களை மட்டுமே கொடுத்து, 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சாம் கரன், ஜாப்ரா ஆர்ச்சர் ஆகியோரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் ஆர்ச்சர் 2 மெய்டன் ஓவர்களையும் வீசியிருந்தார். மீதமிருந்த ஒரு விக்கெட்டை ரஷீத் வீழ்த்தினார்.