‘யாரும் சாப்பிட வரல’ கதறி அழுத முதியவருக்கு சொமேட்டோ கொடுத்த சர்பிரைஸ்!

 

‘யாரும் சாப்பிட வரல’ கதறி அழுத முதியவருக்கு சொமேட்டோ கொடுத்த சர்பிரைஸ்!

உணவு விற்பனை ஆகவில்லை என கதறி அழுத டெல்லியைச் சேர்ந்த முதியவருக்கு சொமேட்டோ உதவியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த கண்டா பிரசாத் என்ற முதியவர் தனது மனைவியுடன் 30 ஆண்டுகளாக மால்வியா நகரில் ‘பாபா தாபா’ என்ற சிறிய உணவகத்தை நடத்தி வருகிறார். பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட இந்த தம்பதி, குறைவான விலைக்கு உணவு விற்று தங்களது வாழ்க்கையை நடத்தி வந்தனர். அவர்களது வாழ்க்கையையே கொரோனா வைரஸ் புரட்டி போட்டு விட்டது. ஊரடங்கால் கடை பல நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது உணவகம் திறக்கப்பட்டும் விற்பனை நடக்கவில்லையாம்.

‘யாரும் சாப்பிட வரல’ கதறி அழுத முதியவருக்கு சொமேட்டோ கொடுத்த சர்பிரைஸ்!

முதியவர் கண்டா பிரசாத் தனது கடைக்கு சாப்பிட வந்த நபர் ஒருவரிடம் யாருமே சாப்பிட வரவில்லை எனக் கூறி கதறி அழ, அந்த நபர் அதனை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்தார். அந்த வீடியோ முதியவரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அந்த வீடியோவை பார்த்த சினிமா பிரபலங்கள் பலர், பாபா தாபாவில் சாப்பிடும் படி தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டனர். அதே போல வீடியோவை பார்த்த பல நெட்டிசன்கள், முதியவரின் கடையில் சாப்பிட குவிந்தனர். இதனால் அந்த கடையில் தற்போது ஏக போகமாக விற்பனை நடக்கிறதாம்.

‘யாரும் சாப்பிட வரல’ கதறி அழுத முதியவருக்கு சொமேட்டோ கொடுத்த சர்பிரைஸ்!

இந்த நிலையில், அந்த முதியவருக்கு சொமேட்டோ நிறுவனம் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது, சொமேட்டோவில் பாபா தாபா கடை இணைக்கப்படுவதாகவும், இது போல சிறிய உணவகங்கள் இருந்தால் எங்களது கவனத்துக்கு கொண்டு வாருங்கள், எங்களால் இயன்ற உதவியை செய்வோம் என சொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. சொமேட்டோ கொடுத்த இந்த சர்பிரைஸ் முதியவரை மிகுந்த மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.